ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் தலைமையில் இந்தியாவுடான உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
முதல் காலாண்டு புள்ளிவிவரங்கள், 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 807,310 பயணிகளுடன் ஒப்பிடும்போது 2,563,297 பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துகிறது.
தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் மசாலா பொருட்கள், ஆபரணங்கள், பம்பு செட்டுகள், முத்துக்கள் ஆகியவை அடங்கும்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கட்டுமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அபுதாபி போலீசார் தெரிவித்த நிலையில், இதில் இந்திய நாட்டை சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் அச்சம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகத்திற்கான (UAE) அரசு முறை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.