டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் கடந்த மாதம் முதலிடத்தை பிடித்தார். உலக பணக்காரர் பட்டியலில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி விட்டு எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவன பங்குகள் மதிப்பு 2.4 சதவீதம் குறைந்ததை அடுத்து எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்குகள் மதிப்பு குறைந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 33,580 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்தது. 
இதனால், ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு, எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட சுமார்  6,972 கோடி அதிகமானதால். தான் இழந்த முதலிடத்தை ஜெப் பெசோஸ் மீண்டும் பிடித்திருந்தார். கடந்த 16ம் தேதி நிலவரப்படி, இவரது சொத்து மதிப்பு 194.2 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ.13.96 லட்சம் கோடியாக அதிகரித்திருந்தது.


இந்நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வந்த முதலீடுகள் காரணமாக, மீண்டும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு அதிகரித்தது.   முதலீடுகளின் மதிப்பு 74 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். 


இன்றுவரை எலன் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், ஹைப்பர்லூப், ஓபன்ஏஐ, நியூரலிங்க், தி போரிங் கம்பெனி, ஜிப் 2, பேபால் ஆகிய எட்டு நிறுவனங்களை நிறுவியுள்ளார்.


ALSO READ | Facebook Vs Australia: பிரதமர் மோடியுடன் ஆலோசனை செய்தார் ஆஸ்திரேலிய பிரதமர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR