ஆஸ்திரேலிய செய்தி வலைதளங்களின் செய்திகள், அதன் லிங்குகள் ஆகியவற்றை தங்களின் தளங்களில் வெளியிடுவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், செய்தி நிறுவனங்களுக்கு ராயல்டி செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை அடுத்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்தன.
புதிய சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கூகுள் (Google) நிறுவனம், சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் அந்நாட்டில் இருந்து வெளியேறப்போவதாகவும் அச்சுற்றுத்தல் விடுத்தது . எனினும் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமரும் அறிவித்ததை அடுத்து மோதல் முற்றியது.
முன்னதாக, முக்கிய ஆஸ்திரேலிய ஊடகங்களுடன், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக செய்திகள் வந்தன. செய்திகளுக்கு வெளியிட பணம் செலுத்துவது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் ஒரு உயர் அரசு அதிகாரி திங்களன்று கூறினார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில், செய்திகளைத் Facebook தளத்தில் செய்திகளை தடை செய்தது பேஸ்புக் நிறூவனம். செய்தி நிறுவனத்துக்கு எதிரான விவகாரத்தில், பேஸ்புக்கின் இந்த செயல் அராஜகமானது, ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என கூறியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), உலகத் தலைவர்களின் ஆதரவைப் நாடிவருகிறார்.
அதற்காகத் திரு. மோரிசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் (PM Narendra Modi) தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் நட்புறவைப் பகிர்ந்து கொள்ளும் ஆஸ்திரேலிய பிரதமர், ஆஸ்திரேலியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கவனித்து வருவதாகவும், அவர் ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நிலைமை குறித்து விவாதித்துள்ளார் என்றும் கூறினார்.
"இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்களை விட தான் வலிமையானவர்கள் என்று நினைக்கும் பிக்டெக் நிறுவனங்களின் நடத்தை , பல நாடுகளுக்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளன. இந்நிறுவனங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள் எதுவும் அவர்களுக்கு பொருந்தாது என்றஃ மனநிலையில் உள்ளனர்" என்று மோரிசன் மேலும் கூறினார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோஷ் ஃப்ரைடென்பெர்க் (Josh Frydenberg), பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மற்றும் கூகிள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
உலகம் முழுவதும் உன்னிப்பாக இந்த விஷயத்தை கவனித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ஆஸ்திரேலியா Vs Google: செய்தி நிறுவனகளுக்கு ராயல்டி விவகாரம் தீர்வை எட்டியதா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR