கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர்.


இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை  பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால்  பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல வாகனங்கள் சேதமடைந்தன, அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்ததாக துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ஷர்ஜீல் காரலின் தெரிவித்தார்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு


வெடிவிபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் ஆராய்ந்து வரும் நிலையில், இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் ஜின்னா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


கராச்சியில் உள்ள அனைத்து பொது மருத்துவமனைகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜியோ செய்திகள் தெரிவிக்கின்றன. 


இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நான்கு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்... கை விரித்த சீனா


காயமடைந்தவர்களின் காயங்களில், வெடிக்கும் சாதனங்களில்  பொதுவாக காணப்படும் இரும்பு துகள்களும், பால் பேரிங்குகளின் சிதறல்களும் காணப்படுகின்றன.


இதற்கு முன்னதாக ஏப்ரல் 27 அன்று, கராச்சி பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு பெண் தற்கொலை குண்டுதாரி மூன்று சீன ஆசிரியர்களைக் கொன்றார்.


இரண்டு வாரங்களில் கராச்சி நகரம் குண்டுவெடிப்பால் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.


ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையை ஒட்டிய தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தை தளமாகக் கொண்ட பலூச் லிபரேஷன் ஆர்மி (BLA) என்ற பிரிவினைவாதக் குழு, குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.
மேலதிக தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.


மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR