வைரலாகும் வீடியோ: பல்வேறு வகையான பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த வீடியோக்களில், பாம்பை கண்டவுடன் மக்கள் ஒருபுறம் பயந்தால், மறுபுறம், அதை பார்த்து ரசிபப்தற்கும் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால், அதே பாம்பு, கொஞ்சம் அவர்கள் பக்கம் திரும்பினாலும், துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று தெறித்து ஓடி விடுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் மிகப்பெரிய பாம்பு அனகோண்டா சாலையில் செல்வதைப் பார்த்து திகைத்த மக்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பாம்பைப் பார்த்தால் பதறிப் போகும் மனிதர்கள், அது சாலையை கடப்பதைப் பார்த்தால் திகைத்துப் போகாமல் என்ன செய்வார்கள்? மனிதர்களிடையே பாம்பு இருப்பதைக் கண்டு பயப்படும் பல வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.


நாட்டிற்குள் வீட்டிற்குள் பாம்பு வந்தால், அதைப் பிடித்து மீண்டும் காட்டுக்குள் விடும் வீடியோவை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் இன்று பார்க்கப் போகும் வீடியோவில் உலகின் மிகப்பெரிய பாம்பாகக் கருதப்படும் அனகோண்டா பாம்பு சாலையில் செல்வதைப் பார்க்கலாம்.  


 மேலும் படிக்க | சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ 


பரபரப்பான சாலையில், மிகப் பெரிய அளவிலான அனகோண்டா பாம்பு திடீரென சாலையில் சென்று ரோட் கிராசிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு பெரிய அனகோண்டா பாம்பு அகலமான நெடுஞ்சாலையை கடக்கிறது. இந்த பாம்பு கிராசிங் மோமெண்ட், ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது.


இந்த வீடியோவை பாருங்கள் 



இந்த அனகோண்டா சாலையின் நடுவில் உள்ள டிவைடரை எளிதில் கடப்பதை நீங்கள் கவனிக்கலாம்.


மேலும் படிக்க | Viral Video: நடுரோட்டில் இப்படியா..அடுத்து என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ 


அதிர்ச்சியூட்டும் வீடியோ


இந்த வீடியோ, Snake.wild என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பிரேசிலில் இருந்து வந்ததாகத் தெரிகிரது. இந்த வீடியோவை மக்கள் மிகவும் விரும்புகின்றனர்.


சுமார் 2 நிமிடங்கள் நீளமான இந்த வீடியோ பாம்பு எவ்வளவு பெரிது என்பதைக் காட்டுகிறது. அது டிவைடரை கடக்க நீண்ட நேரம் ஆனது. சாலையைக் கடக்கும்போது யாரும் அந்த பாம்புக்கு முன்னால் வரவே இல்லை. இந்த பாம்புக்கு முன்னால் வர உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?


மேலும் படிக்க | சிங்கத்துடன் விளயாடும் பச்சைக் குழந்தை! அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ