பெற்றோரிடமிருந்து பிரிந்த 7 மாத குழந்தை -மனதை உருக்கும் படம்
தலிபான்களின் பயம் 7 மாத சிறுமியை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டது. இந்த அப்பாவி குழந்தை தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது.
காபூல்: தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இருந்து மனதை உருக்கும் பல படங்கள் வெளிவருகின்றன. தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் டாக்சிகளை ஓட்டி வருவதைக் காண முடிந்தது. அவர்கள் விமானத்தில் ஏற முயன்ற வீடியோவும் வெளிவந்தது. இப்போது மனதை உருக்கும் மிகவும் வேதனையான படம் வெளிவந்துள்ளது.
7 வயது குழந்தை பெற்றோரிடமிருந்து பிரிந்தது:
தலிபான்களின் பயம் 7 மாத சிறுமியை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டது. இந்த அப்பாவி குழந்தை தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது. இந்த பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றும் அறியாத இந்த அப்பாவி குழந்தையின் நிலை அதிர்ச்சியளிக்கிறது. உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, அவரது பெற்றோர் யார் என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ALSO READ | Taliban Returns: 2020-ல் எழுதப்பட்ட அரசியல் - ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கு காரணம்?
குழந்தையின் வீட்டை கண்டுபிடிக்க முயற்சி:
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) அஸ்வாகா செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, சிறுமியின் பெற்றோர் காபூலின் பிடி-5 என்ற பகுதியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த செய்தி நிறுவனம் அவர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் இந்த படத்தை பார்த்தவர்கள் கோபத்துடனும், வேதனையுடனும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்கொள்ளத் தவறிய சர்வதேச நிறுவனங்களுக்கு எதிராக நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (North Atlantic Treaty Organization) மவுனமாக இருப்பதை மக்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR