புதுடெல்லி: தலிபான்களின் ஆக்கிரமிப்பால் ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றும் எனது முடிவை நான் உறுதியாக நம்புகிறேன். எனது முடிவு விமர்சிக்கப்படுவதை நான் அறிவேன். மக்கள் மற்றும் வீரர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது எது நடந்தாலும் அது சரியானது தான் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்த வார்த்தைகளைக் கேட்டால், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தவறு செய்யவில்லை எனத் தெரியும். அதே நேரத்தில் உண்மையை ஆராய்ந்தால், அவரின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்று ஆப்கானிஸ்தானில் எது நடக்கிறதோ, அதன் ஸ்கிரிப்ட் 18 மாதங்களுக்கு முன்பு தோஹாவில் எழுதப்பட்டு என்று சொல்லலாம்.
இன்றைய நிலைமை மற்றும் 2020 சம்பவம்:
ஆப்கானிஸ்தான் மற்றும் தெற்காசியாவின் அரசியலைப் புரிந்துகொண்ட வல்லுநர்கள், கடந்த 72 மணிநேரத்தில் அங்கு என்ன நடந்தது என்பதற்கான விதைகள் பிப்ரவரி 2020 இல் அமெரிக்க-தலிபான்களுக்கு இடையிலான சந்திப்பில் விதைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். சமாதானப் பேச்சு என்ற பெயரில் தோஹாவில் (Doha) பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இருவருக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் (NATO) திரும்ப வேண்டும். அடுத்த 14 மாதங்களில், அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில், தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தாவை நிறுத்துவார்கள் என முடிவு செய்யப்பட்டது.
ALSO READ | ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்
இந்த ஒப்பந்தம் தோஹாவில் செய்யப்பட்டது:
தோஹா அமைதிப் பேச்சுக்காக, பாகிஸ்தான் (Pakistan) சிறையில் இருந்த முல்லா அப்துல் கனி பரதரை (Abdul Ghani Baradar) அப்போதைய டிரம்ப் நிர்வாகம் விடுவித்தது. தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்கா கடந்த காலங்களில் அவசரம் காட்டியது.
இராணுவம் முன்பே விலகியது:
அமைதி பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 5000 தலிபானிகளை விடுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆஃப்கான் அரசு தோஹா ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தை சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரித்தன. பின்னர் அமெரிக்க அழுத்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சிறைபிடிக்கப்பட்ட தலிபான்களை விடுவித்தது. 5000 சிறைப்பிடிக்கப்பட்ட தலிபான் போராளிகள் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டபோது, அவர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆக்கிரமிப்பு மீண்டும் தொடங்கியது.
4 மாதங்களுக்குள் 6 லட்சம் கிமீ பரப்பளவில் தலிபான்களின் கட்டுப்பாட்டை எவ்வாறு அடைந்தது:
14 ஏப்ரல்
தங்கள் நாட்டு இராணுவத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளும் முடிவை அமெரிக்கா அறிவித்தது.
மே 1
அமெரிக்க இராணுவம் திரும்பத் தொடங்கியது.
மே 4
ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மீது தலிபான் தீவிரவாத அமைப்பு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.
ALSO READ | "மெல்ல மெல்ல வரலாற்றில் காணாமல் போவோம்” : ஆப்கான் பெண்ணின் உருக்கமான வீடியோ
7 ஜூன்
தலிபான்-ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான சண்டை 26 மாகாணங்களுக்கு பரவியது.
ஜூன் 22
வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் தீவிரமடைந்தன.
2 ஜூலை
அமெரிக்கா தனது முக்கிய தளமான புட்காமில் இருந்து இராணுவ படைகளை திரும்ப அழைத்தது.
21 ஜூலை
ஆப்கானிஸ்தானின் 18-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை தலிபான் கைப்பற்றியது.
ஆகஸ்ட் 12
தலிபான்கள் கஸ்னி, ஹெராட், கந்தஹார் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
ஆகஸ்ட் 14
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான மசார்-இ-ஷெரீப் கைப்பற்றப்பட்டது.
ஆகஸ்ட் 14
ஆப்கானிஸ்தானின் 34 இல் 25 மாகாணங்களைக் கைப்பற்றியது.
ஆகஸ்ட் 15
காபூல் மற்றும் ராஷ்டிரபதி பவன் கைப்பற்றப்பட்டது.
ஆகஸ்ட் 15
ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடிவிட்டார்.
ALSO READ | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR