சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை: 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில் அதிக மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஒரே நாளில் சுமார் ஒரு வருட கால மழை பெய்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய்: தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 80,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக திங்களன்று (ஆகஸ்ட் 9) அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) வரை கனமழை பெய்ததைத் தொடர்ந்து, இந்த மாகாணத்தின் முக்கிய ஆறுகளில் நீரின் அளவு எச்சரிக்கை அளவை விட அதிகமாக உள்ளது.
அதிகாரப்பூர்வ சீன (China) செய்தி சேவையின் படி, Dazhou நகரில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் வெள்ள வரம்பு அதன் அதிகபட்ச அளவை விட 2.2 மீட்டர் அதிகமானது.
மாகாணம் முழுவதும் ஆறு நகரங்களில் 440,000 க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் (Flood) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிச்சுவானில் ஏற்கனவே 250 மில்லியன் யுவான் ($ 38.57 மில்லியன்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 45 வீடுகள் அழிக்கப்பட்டு 118 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மாநில ஒளிபரப்பாளரான சிசிடிவி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
வழக்கமாக, கோடை காலத்தில் சீனா கனமழையால் பாதிக்கப்படுகிறது. ஆனால் இப்படிப்பட்ட தீவிர இயற்கை பேறழிவுகளும் வானிலை மாற்றங்களும் தற்போது அடிக்கடி நிகழ்வதால், சீனா தனது நகரங்களின் கட்டுமான தரத்தையும், இயற்கை பேரழிவுகளை கையாளும் தன்மையையும் மேம்படுத்த வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ALSO READ: Ladakh: நீண்ட போருக்கு தயாராகி வரும் இந்தியா; சீனாவை நம்பாததன் காரணம் என்ன..!!
சீன வானிலை மைய அதிகாரிகள் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெப்பநிலை உயர்வால் உலகம் முழுவதும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வரும் ஆண்டுகளில் சீனாவில் மழையின் தாக்கம் மோசமாக வாய்ப்புள்ளது.” என்று கூறினர்.
"அதிக அளவிலான வெப்பம் (Global Warming) மற்றும் அதிக மழை போன்ற தீவிர நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. சீனாவில் காலநிலை அபாயத்தின் அளவு அதிகரித்து வருகிறது" என்று மாநில சிந்தனைக் குழுவின் தேசிய காலநிலை மையத்தின் துணை இயக்குநர் சாவ் கிங்சென் கூறினார்.
அதிக வெப்பம் மற்றும் மழைப்பொழிவு சீனாவின் நீர் வளங்களை மேலும் பாதிப்படையச் செய்வதாகவும், தீவிர வானிலை பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
கடந்த மாதம், மத்திய சீன மாகாணமான ஹெனான் வரலாற்றில் இதுவரை கண்டிறாத மிக மோசமான மழை மற்றும் புயலை எதிர்கொண்டது. 19 மாநில வானிலை கண்காணிப்பு நிலையங்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக தினசரி மழையை பதிவு செய்தன.
வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில் அதிக மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஒரே நாளில் சுமார் ஒரு வருட கால மழை பெய்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: லண்டனில் கொட்டித்தீர்க்கும் மழை: வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR