புதுடெல்லி: சீனாவிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் ஒருங்கிணைந்த கடனின் இரண்டாவது தவணையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் சீன அதிகாரிகளின் உயர்நிலைக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை தனது அந்நிய செலாவணி இருப்பை உயர்த்த போராடி வரும் நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் யாங் ஜீச்சி (Yang Jiechi)  தலைமையிலான உயர் அதிகார சீனக் குழு இலங்கை வருகிறது.  


கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் இருந்து தெற்காசிய பிராந்தியத்திற்கு பயணம் செய்யும் முதல் சீன அதிகாரியாக சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சி (Yang Jiechi)   என்று கூறப்படுகிறது.


யாங் தலைமையிலான சீனக் குழு, இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சீனாவிடம் இருந்து 1.2 பில்லியன் டாலர் ஒருங்கிணைந்த கடனின் (syndicated Chinese loan) இரண்டாவது தவணையை இலங்கை எதிர்பார்த்திருக்கும் நிலையில் சீன அதிகாரிகளின் உயர்நிலைக் குழுவின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?


கடந்த வாரம்  இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் அளவுக்கு Moody's குறைத்தது. அதையடுத்து, எதிர்பார்க்கப்பட்ட பாண்டா பத்திரங்கள் (Panda (Chinese) bonds) மற்றும் ஒருங்கிணைந்த சீனக் கடன் (syndicated Chinese loan) ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை சமன் செய்ய உதவும் என்று இலங்கை அரசு கூறியிருந்தது.


இலங்கையின் இறையாண்மை கடன் மதிப்பீட்டை இரண்டு புள்ளிகள் குறைத்த மூடிஸ், இந்த தெற்காசிய நாடு தனது மிகப்பெரிய வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கான நிதியைப் பெறுவதற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது.


கொரோனா வைரஸ் பெருந்தொற்று, தீவு தேசமான இலங்கையின் பொருளாதார இன்னல்களை அதிகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இலங்கை "பி 2" (உயர் கடன் ஆபத்து) இலிருந்து "Caa1" (மிக அதிக கடன் ஆபத்து) என்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டது.  


"அதாவது, இலங்கையின் வெளிநாட்டு கடன்களை அந்நாட்டு அரசாங்கத்தால் திரும்பச் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்ப்பதற்காக, இலங்கை இந்த இக்கட்டான நிலையை சமாளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை அரசின் திறன் மற்றும் அதன் கடனை திருப்பிச் செலுத்தும் என்ற ஆக்கப்பூர்வமான எண்ணத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்" என்று இலங்கையின் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்தி | பில்லியன் அமெரிக்க டாலர் sovereign bondஐ திருப்பிச் செலுத்தும் இலங்கை! காரணம் என்ன?


இலங்கையின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா ஏற்கனவே மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது குறித்து உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன, மேலும் இலங்கையை தனது கடன் வலையில் சீனா சிக்க வைப்பதாகவும், சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்து வருகின்றன.


2017 ஆம் ஆண்டில், அப்போதைய மைத்ரிபால சிறிசேன அரசாங்கம் சீனாவுடன் 99 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.


இந்த பயணத்தில் கோவிட் -19 நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையின் பொருளாதாரம், குறிப்பாக சுற்றுலாத் துறை கடந்த ஆண்டு முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் (Easter Sunday attacks) 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பிறகு கொரோனா வைரஸ் தொற்றுநோய் தனது கோரதாண்டவத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.


அண்டை நாடான இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியாவும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிரது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவுவதற்கும், கொரோனா தொடர்பான இடையூறுகளைச் சமாளிப்பதற்கும், இந்தியா 400 மில்லியன் டாலர் பணப்பரிமாற்ற வசதியை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கி உள்ளது.இதற்கான ஆவணங்களில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டது.நாணய இடமாற்று ஏற்பாடு நவம்பர் 2022 வரை தொடரும்.


இலங்கையில் இருந்து புத்த யாத்ரீகர்கள் குழு வருவதற்கு இந்தியா வசதி செய்யும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் குஷி நகருக்கு முதல் விமானம் இயக்கப்படும் என்று இந்தியா சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்தி | புத்தரின் இறுதி மூச்சு நின்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் வருவதன் காரணம் என்ன? 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR