Thailand School Bus Fire: தாய்லாந்து நாட்டில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்ததுள்ளது. சுமார் பள்ளி பேருந்து ஒன்றில் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அந்த பேருந்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் குறைந்தது 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, தீ விபத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 25 பேரின் நிலை என்ன என தெரியவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சூரியா ஜங்ருங்கிராங்கிட் தெரிவித்துள்ளார். மேலும், தாய்லாந்து பிரமதர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். 


மொத்தம் 44 பேர்


மேலும் போக்குவரத்து துறை அமைச்ர் சூரியா ஊடகங்களிடம் கூறுகையில்,"மொத்தம் 38 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 44 பேர் அந்த பேருந்தில் பயணித்துள்ளதாக முதல்கட்டமாக தகவல் தெரிந்துள்ளது. மேலும், தீ விபத்தில் இருந்து மூன்று ஆசிரியர்கள் மற்றும் 16 மாணவர்கள் வெளியே வந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மற்றவர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. எனவே, தெளிவான தகவல் இதுவரை கிடைக்கவில்லை என்றார். 


மேலும் படிக்க | 'பலியானார் ஹிஸ்புல்லா தலைவர்' அறிவித்த இஸ்ரேல் - யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?


தாய்லாந்தின் உதய் தனி மாகாணத்தில் இருந்து வடக்கு பாங்காக்கின் புறநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த பள்ளி பேருந்தின் டயர் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. டயர் வெடித்ததால் பேருந்து சாலையில் இருந்த தடுப்பின் மீது சென்று பலமாக மோதியதாக தெரிகிறது. இதனை மீட்பு பணியில் இருந்து ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விபத்துக்குள்ளான பேருந்து அழுத்தப்பட்ட வாயு மூலம் இயக்கப்பட்டுள்ளது. தடுப்பின் மீது மோதியதால் எரிபொருள் டேங்க் வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



25 பேரின் நிலை என்ன?


மேலும், தீ அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியிலும் தாமதம் ஏற்பட்டது. தீயை அணைக்க மீட்புப் படையினர் கடுமையாக முயன்றனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து உள்ளே இருந்தவர்களை மீட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, அதிகாரப்பூர்வமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகவும் தாமதமாகலாம். இதுவரை 25 பேரின் நிலை என்ன என தெரியவில்லை என்பதாலும், பலரும் படுகாயம் அடைந்திருப்பதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.  


சமூக வலைதளங்களில் விபத்து நடந்த சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களில், அந்த பள்ளி பேருந்து தீ ஜுவாலைகள் கொழுந்துவிட்டு எரிவதை பார்க்க முடிகிறது. மேலும் வானுயரத்திற்கு அடர்ந்த கருங்புகை எழுவதையும் பார்க்க முடிகிறது. 


இந்த விபத்து குறித்து பிரதமர் பேடோங்டர்ன் அவரது X பக்கத்தில்,"உதய் தனி மாகாணத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து... அதனால் உயிரிழப்பும், காயங்களும் ஏற்பட்டதை அறிந்தேன். ஒரு தாயாக, காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் பெண்! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ