முதலையின் வாய்க்குள் கைவிட்ட நபர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா? 4 கோடி வியூஸை தாண்டும் வீடியோ

Crocodile Viral Video: பண்ணை ஒன்றில் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி சாகசம் காட்டிய நபருக்கு கொடூர சம்பவம் நடந்தது. அந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2024, 10:15 PM IST
  • இந்த வீடியோ தாய்லாந்தில் எடுக்கப்பட்டுள்ளது.
  • இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
  • சுமார் 4 கோடிக்கும் மேலான வியூஸ் இதற்கு வந்துள்ளது.
முதலையின் வாய்க்குள் கைவிட்ட நபர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா? 4 கோடி வியூஸை தாண்டும் வீடியோ title=

Crocodile Viral Video: சமூக வலைதளங்களில் அடிக்கடி பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாவது வாடிக்கைதான். கிரிக்கெட் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், அரசியல் தலைவர்களின் மேடை பேச்சுகள், சினிமா பிரபலங்களின் பேச்சுகள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் என இணையத்தில் எந்த வீடியோ எப்போது, எதற்காக வைரலாகிறது என்பது ஊகிக்கவோ, கணிக்கவோ முடியாது. பல வருடங்களுக்கு முன் வெளியான வீடியோக்கள் திடீரென இன்று மதியத்தில் இருந்து அதிகம் பரவும். காரணத்துடனும் இந்த வீடியோ அதிகம் பரவலாம், காரணம் இல்லாமலும் பகிரலாம். 

அந்த வகையில், இணையத்தில் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள், யூ-ட்யூபில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் என 1 நிமிடத்திற்குள் அடங்கும் குட்டி குட்டி வீடியோக்களின் ஆதிக்கமும் அதிகமாகிவிட்டது. அதாவது, ஒருவருக்கு ஒரு நல்ல வீடியோவை ஒரு நிமிடம் வரைதான் முழுதாக பார்க்க பிடிக்கிறது. சற்றே பெரிய வீடியோவாக இருந்து, அவை நன்றாக இருந்தால் கூட பலரும் விரல்களால் வீடியோவை தள்ளிவிட்டு அடுத்த வீடியோவுக்கு போய்விடுவார்கள். எனவே, ஒரு நிமிடம் ஒரு பார்வையாளரை நீங்கள் பார்க்கவைத்துவிட்டால் உங்களின் வீடியோ சக்சஸ் எனலாம். 

முதலை வாய்க்குள் கைவிட்ட நபர்

இப்படி வீடியோக்களின் ஆதிக்கம் சமூக வலைதளங்கள் முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வகையில், தற்போது முதலையிடம் சேட்டை செய்த இளைஞரின் திக் திக் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஏதோ மிருகக்காட்சி சாலை ஒன்றில் இருக்கும் பெரிய முதலையிடம், அங்கு பணியாற்றும் நபர் போல் இருக்கும் ஒருவர் விளையாட்டுத்தனமாக செயல்படுகிறார். உடனே அந்த முதலை செய்த செயல்தான் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளது.

மேலும் படிக்க | கண் இமைக்கும் நேரத்தில் கபாலென சரிந்து விழுந்த கட்டிடம்!! வைரல் வீடியோ..

சிவப்பு நிற ஆடை அணிந்துகொண்டு அந்த இளைஞன், அந்த முதலையிடம் விளையாடுகிறான். முதலை வாயை பிளந்து இருக்கும் சமயத்தில் வாய்க்குள் கையை நீட்டி விளையாட்டுக்காட்ட, உடனே முதலை சடார் என வாயை முடி கடித்துவிட்டது. இருப்பினும் உடனே பிடியை முதலை தளர்த்தியதால் அந்த நபர் கையை வெளியே எடுத்தார். இருப்பினும் அவரது கையில் பலமாக காயம் ஏற்பட்டது. அவர் வலியில் துடிப்பது வீடியோவிலேயே பார்க்க முடிந்தது. 

4 கோடியை வியூஸை தாண்டும் வீடியோ

இந்த வீடியோ தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகரில் உள்ள Million Years Stone Park & Pattaya Crocodile Farm என்ற முதலை பண்ணையில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால், எப்போது எடுக்கப்பட்டது, யாரால் பதிவேற்றப்பட்டது என்பது தெரியவில்லை. மேலும், பார்வையாளர்களுக்கு நேரடியாக சாகசம் காட்டுவது வழக்கமாகும். அந்த சாகசத்தின் ஒரு பகுதியாகவே அந்த நபர் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி உள்ளார். ஆனால், திடீர் ட்விஸ்ட்டாக உடனே முதலை அவரை கடித்து காயம் ஏற்படுத்திவிட்டது. இதனை அவர் எதிர்பார்க்கவில்லை என தெரிகிறது. அவருக்கு ரத்தம் வடிவதையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ அங்கிருந்த பார்வையாளர்களை மட்டுமின்றி, நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் scorpio_s11__0012 என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 4 கோடிக்கும் மேலான வியூஸ்கள் இன்ஸ்டாகிராமில் மட்டும் கிடைத்துள்ளது. இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பலரால் பதிவிடப்பட்டுள்ளது, அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. விலங்குகளிடம் இதுபோன்று விளையாட்டுத்தனமாக இருப்பதோ, சாகசங்களை செய்வதையோ தவிர்த்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சவாரி ஜீப் மீது ஏறிய இரண்டு சிங்கங்கள், த்ரிலிங் ரைடில் ஜர்க் ஆன டூரிஸ்டுகள் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News