ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்படும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. X தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்று வருகிறது. விமானத்தில் பணி புரியும் இரண்டு பாதுகாப்பு ஊழியர்கள் அந்த பெண்ணை வேகமாக விமானத்தில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதனை விமானத்தில் இருந்த பயணிகள் ஆச்சரியமாக பார்த்து கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் சூரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த உள்ளூர் விமானத்தில் நடைபெற்றுள்ளது. விமானத்தில் பயணம் செய்ய ஒரு பயணி, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கோவிலில் உண்டியல் காணிக்கையை திருடும் நபர்! வைரலாகும் வீடியோ!
அடையாளம் தெரியாத அந்த பெண்ணை இரண்டு பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக இழுத்து கொண்டு வந்து விமானத்தை விட்டு வெளியேற்றுகின்றனர். மேலும் வீடியோ முழுவதும் அந்த பெண் பேசும் சத்தம் கேட்கிறது. ஆனால் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. பயணிகளின் பாதுகாப்பிற்காக அவரை விமானத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்பது வீடியோவை பார்க்கும் போது புரிகிறது. நிலைகுலைந்த நிலையில் இருக்கும் அந்த பெண்ணை விமான பாதுகாப்பு அதிகாரிகள் அமைதிப்படுத்த முயற்சி செய்கின்றனர். சொல்வதை கேட்டு கொண்டு விமானத்தை விட்டு கீழே இறங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
தனது இருக்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் அதனை சொல்ல விடாமல் அதிகாரிகள் வேகமாக அவரை வெளியேற்றுகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ விமானத்தில் எடுத்த பயணி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்துள்ளார். அந்த பெண் விமானத்தில் பயணம் செய்த சக பயணியைத் தள்ளிவிட்டதாகவும், இதனை கேட்க வந்த ஊழியர்களை மரியாதை இல்லாமல் பேசியத்தாலும் தான் அந்த பெண் வேகமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Kalesh b September 29, 2024
X தளத்தில் இந்த வீடியோ 5 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. உண்மையில் விமானத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள பல பயனர்கள் ஆவலுடன் உள்ளனர். "இப்படி ஒரு விதத்தில் அந்த பெண்ணை இழுத்துச் செல்வதற்கு நிச்சயம் அவள் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும்," என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். "உள்ளூர் சாலைகளிலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி மக்களின் சண்டை போடும் பழக்கத்தை மாற்ற முடியவில்லை" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். "மக்களுக்கு எல்லா இடங்களிலும் பொறுமை இல்லை. ஒருவேளை யாரும் ஒழுக்கமாக இருக்க கற்றுக்கொள்ள விரும்பவில்லை," என்று இன்னொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ