மியான்மாரில், ஜனநாயகத்தை மீட்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர் ஆங் சங் சூகியையும் பிற தலைவர்களையும் விடுவுக்க நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம், மியான்மாரை கலவர பூமியாக ஆக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரிய அளவிலான இராணுவ எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியாக, யாங்கோன் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இளம் போராட்டக்காரர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து, சிறிய குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்தனர். 


கைது செய்யப்படுமோ என்ற அச்சம் இருந்தபோதிலும், மியான்மரின் (Myanmar) மிகப்பெரிய நகரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு 8 மணிக்கு ஊரடங்கு உத்தரவை மீறி போராட்டம் நடத்த வெளியே வந்தனர். 


ஜனநாயக ரீதியாக தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க, ராணுவம் சமூக ஊடகங்களை (Social Media) முதலில் தடை செய்தது. பின்னர் இணையத்தையே முடக்கி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. 

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மியான்மர் பாதுகாப்பு படையினரால் அடுக்குமாடி கட்டிடங்களில் "சிறை வைக்கப்பட்டுள்ளனர்" என்றும் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.


ALSO READ | கலவர பூமியாகும் மியான்மார்; Aung San Suu Kyi கட்சி அதிகாரி போலீஸ் காவலில் மரணம்


பாதுகாப்பு படையினரின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடியவர்களை தேடி கைது செய்ய,  காவல்துறையினர் வீடு வீடாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


மியான்மரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையும் வெளிநாட்டு தூதரகங்களும் இராணுவம் நடத்தி வரும் வன்முறையை கண்டித்தன. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்,  போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தினார்.


அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த ராஜீய நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பிற மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக திரும்ப அனுமதிக்குமாறு பாதுகாப்புப் படையினரை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டன.


ஆங் சான் சூகி (Aung San Suu Kyi )தலைமையிலான ஜனநாயகக் கட்சியை இராணுவம் பதிவியிலிருந்து அகற்றி, அவரையும் அவரது பல என்எல்டி கட்சி உறுப்பினர்களுடன் கைது செய்தது.  பிப்ரவரி 1 ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து  ஜனநாயகத்தை மீட்க போராட்டம் நடைபெற்று வருகிறது.


ALSO READ | மியான்மார் ராணுவத்தின் ஒடுக்குதலையும் மீறி தீவிரமடைகிறது மக்கள் போராட்டம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR