நியூயார்க்: இந்தியாவைச் சேர்ந்த ஆதித்ய சிங்(37),கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், உயர் கல்வி மேற்கொள்ள அமெரிக்காவிற்கு சென்றார். ஒருவழியாக படிப்பை முடித்த அவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தார்.  வயது மூப்பின் காரணமாக அந்த நண்பரின் தந்தையை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்துள்ளார்ஆதித்ய சிங்.  இந்நிலையில் அக்டோபர்-19,2020-ல் தனது பிறப்பிடமான இந்தியாவிற்கு திரும்புவதற்காக சிகாகோவின் 'ஓ ஹேர்' விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.  அந்த சமயம் இந்தியாவில் கொரோனா கோரதாண்டவம் ஆடியது.  கொரோனாவின் மின்னல் வேக பரவலை கண்டு அச்சமடைந்த அவர் தான் ஏற வேண்டிய விமானத்தில் ஏறாமல்,அந்த விமான நிலையத்திலேயே தங்கி விட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ சீனாவில் வேகமாக பரவும் கொரோனா, மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு..!!


விமான நிலையத்தில் தங்கிய அவர் சாமார்த்தியமாக யார் கண்ணிலும் படாமலும், கண்காணிப்பு கேமராவின் பிடியிலும் கூட சிக்காமல் அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு மறைவாக வசித்து வந்திருக்கிறார்.  மேலும் உணவிற்காக அங்கு வரும் பயணிகளிடம் பிச்சை எடுத்து வயிற்றை நிரப்பி அதன் மூலம் தனது வாழ்நாளை விமான நிலையத்திலேயே கழித்து ஆதித்ய சிங் கழித்து வந்தார். இந்நிலையில் வசமாக ஒரு நாள் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிவிட்டார்.  ஆதித்ய சிங்கை பிடித்த அதிகாரிகள் விசாரித்தனர், அப்போது அவர்,அங்கு பணிபுனியும் மேற்பார்வையாளர் ஒருவரின் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். ஏற்கனவே அந்த அடையாள அட்டை காணவில்லை என்று அந்த அதிகாரி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.  அந்த அதிகாரியின் அடையாள அட்டை தான் இது என்பதை போலீசார் உணர்ந்தனர்.பின்னர் இந்த புகாரின் அடிப்படையில்,2021 ,ஜனவரி-16ம் தேதியன்று ஆதித்ய சிங்கை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மீது சட்ட விரோதமாக விமான நிலையத்திற்குள் வாசித்துள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டது. 


மேலும் ,சரியான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அவரை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரப்பட்டு ஒருவழியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதனடிப்படையில் ,விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆதித்ய சிங் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை அதிகாரபூர்வமாக நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் ஆதித்ய சிங் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மீறி வெளியே ஒரு முறை சென்றுள்ளார்.  மேற்கண்ட இந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்படலாம் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 


ALSO READ இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் கெனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR