இந்தியாவின் கனவு நிறைவேறாது: தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுப்போம் -பாகிஸ்தான்
எல்லையில் இந்தியாவின் செயலுக்கு தக்க பதிலடி சரியான நேரத்தில் நாங்கள் கொடுப்போம். என்று ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்தியத் துணை ராணுவப்படை மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 14 ஆம் தேதி நடத்தியத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் துயரத்தையும், கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காரணமானவர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 12 நாட்கள் கழித்து இந்திய விமானப்படை மிராஜ் 2000 போர் விமானம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்பட்ட வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டன. முக்கிய தீவரவாதிகளும் பலியாகினர்.
இந்தியாவிடம் வாலாட்டினால் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. மேலும் நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது; யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன். வீரர்களின் அயராத உழையப்பாலும், வீரத்தாலும் இந்த நாடு பாதுகாப்பாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று இந்தியாவின் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியாதவது, இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறுவதில் உண்மை இல்லை. தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்க்கான எந்தவித அறிகுறியும் இல்லை. ஆனால் இந்தியா தவறான தகவல்களை கூறிவருகிறது. இது தேர்தலுக்காக பயன்படுத்தப்படுகிறது. எல்லையில் இந்தியா விதிகளை மீறி வந்துள்ளது. இதற்க்கு தக்க பதிலடி சரியான நேரத்தில் நாங்கள் கொடுப்போம். இதுக்குறித்து பிரதமர் இம்ரான்கான் பேசி வருகிறோம். இந்தியாவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் ஷா மஹ்மூத் குரேஷி கூறினார்.