டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?
Employment Cutbacks: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதும், எலோன் மஸ்க் கிட்டத்தட்ட 75% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன
புதுடெல்லி: டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினாலும் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட 75% ட்விட்டர் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. நிறுவனம் யாருடையதாக இருந்தாலும் டிவிட்டர் நிறுவனத்தின் பணியாளர்களில் 25% மட்டுமே அந்த நிறுவனத்தின் ஊழியர்களாக தொடருவார்கள் என்பதை இந்த செய்தி சொல்கிறது. அதாவது, இன்னும் சில மாதங்களில் டிவிட்டர் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. நேற்று (அக்டோபர் 20, வியாழன்) வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தி, பேட்டிகள் மற்றும் பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது.
பில்லியனர் எலோன் மஸ்க், ட்விட்டர் இன்க் நிறுவனத்தை வாங்குவதற்கான தனது முயற்சியில், சமூக ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் 7,500 ஊழியர்களில் 75% பேரை பணிநீக்கம் செய்ய விரும்புவதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தாலும், எலோன் மஸ்க் டிவிட்டரை வாங்காவிட்டாலும் கூட நிறுவனம், தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதாரங்களின்படி, ட்விட்டரின் தற்போதைய நிர்வாகம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் ஊதியத்தை சுமார் $800 மில்லியன் குறைக்க எண்ணியுள்ளது, இதன் விளைவாக நான்கில் ஒரு பங்கு ஊழியர்கள் வெளியேறுவார்கள்.
சமூக ஊடக நிறுவனத்தின் மனிதவளத் துறையின் உறுதிமொழிகள் இருந்தபோதிலும், பெருமளவிலான பணிநீக்கங்கள், பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவதற்கும் உள்கட்டமைப்புச் செலவுகளைக் குறைப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட், தெரிவித்துள்ளது. எலோன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே இந்த திட்டத்தை டிவிட்டர் நிறுவனம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | செண்ட் வாங்கலையோ செண்ட்! கூவிக்கூவி விற்கும் எலோன் மஸ்க்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களுக்கு டிவிட்டர்உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. முதலில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்த மஸ்க் , பிறகு அது தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயன்றார். இதற்குக் காரணம், சமூக ஊடகத் தளத்தில் ஸ்பேம் மற்றும் போட் கணக்குகளின் அளவை நிறுவனம் தவறாகக் குறிப்பிட்டதாக மஸ்க் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் டிவிட்டர் மற்றும் எலோன் மஸ்க் தரப்புக்கு இடையே சட்ட ரீதியான மோதல் ஏற்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மஸ்க் தனது மனதை மாற்றிக்கொண்டு, அதன் அசல் விதிகளின்படி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக அறிவித்தார்.
மேலும் படிக்க | கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ