American Congress vs Trump: கொரோனா தொற்றுநோயை கையாள்வது தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நிலையில், திங்களன்று (அக்டோபர் 17) வெளியிடப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை, டொனால்ட் டிரம்பின் நிர்வாகம், கோவிட்-19 பற்றிய துல்லியமான தகவல்களை சுகாதார அதிகாரிகளை வழங்குவதைத் தடுத்தது என்று கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தொடர்பான டிரம்பின் நம்பிக்கையை ஆதரிக்கும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. டிரம்ப் உதவியாளர்கள் கோவிட் குறித்த சரியான தகவல்கள் வெளியாவதை தடுத்ததை அமெரிக்க அரசின் விசாரணை வெளிப்படுத்துகிறது
"அரசியல் நியமனம் பெற்றவர்களை வெளியீட்டுச் செயல்பாட்டில் நுழைக்க மற்றும் CDC இன் அறிவியல் அறிக்கைகளை மறுபரிசீலனை செய்ய, டிரம்பின் ஆட்சியில் அதிகாரிகள் முன்னோடியில்லாத நடவடிக்கைகளை எடுத்தனர். இவற்றில், CDC இன் கண்டுபிடிப்புகளை நேரடியாக எதிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட op-eds மற்றும் பிற பொது செய்திகளும் அடங்கும்" என்று அறிக்கை கூறியது.
மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொற்றுநோயைக் கையாண்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை டிரம்ப் பகிரங்கமாக ஆதரித்தார். தற்போது, இந்த விவகாரத்தில் ஆய்வும் விசாரணையும் மேற்கொண்ட புலனாய்வாளர்களுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் மூத்த அதிகாரிகளை, டிரம்ப் உதவியாளர் கட்டாயப்படுத்தி அறிக்கைகளை திருத்தி எழுத முயன்றதாகக் கூறினர்.
"அரசியல் நியமனம் பெற்றவர்களை வெளியீட்டுச் செயல்பாட்டில் கொண்டுவரவும், CDC இன் அறிவியல் அறிக்கைகளை மறுக்கவும் அதிகாரிகள் முன்னோடியில்லாத நடவடிக்கைகளை எடுத்தனர்" என்று அந்த அறிக்கை கூறியது.
இந்த விவகாரத்தை விசாரித்த புலனாய்வாளர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் CDC அதிகாரிகள் மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் என ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பிரமுகர்களை நேரடியாக விசாரித்து, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் (HHS) டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள், CDCயின் Morbidity and Mortality Weekly Report (MMWR) வாராந்திர அறிவியல் இதழில் அவர்கள் விரும்பும் தகவல்களை பரப்ப, கட்டுரைகளைத் திருத்துவது அல்லது அவற்றை தடுத்தது எப்படி என்பதை புலனாய்வார்கள் குழு விவரித்துள்ளது. இந்த அறிக்கை, டிரம்புக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் 18 MMWRகளின் "உள்ளடக்கங்களை மாற்றவும், மறுதலிக்கவும் அல்லது வெளியீட்டை தாமதப்படுத்தவும்" முயன்றனர் என்றும், அதில் குறைந்தது ஐந்து சந்தர்ப்பங்களில் அவர்களின் முயற்சி வெற்றியடைந்தது என்றும் தெரிகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ