செண்ட் வாங்கலையோ செண்ட்! கூவிக்கூவி விற்கும் எலோன் மஸ்க்

Elon Musk Perfume: டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் வாசனைத் திரவியத் துறையையும் விட்டு வைக்கவில்லை. தனது சொந்த வாசனை திரவிய வரிசையான 'பர்ன்ட் ஹேர் பெர்ஃப்யூம்' அறிமுகப்படுத்தினார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2022, 11:35 AM IST
  • ’பர்ன்ட் ஹேர் பெர்ஃப்யூம்'
  • தலைமுடியை எரித்து தயாரிக்கப்படுகிறதா இந்த செண்ட்?
  • டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க்கின் புதிய அவதாரம்
செண்ட் வாங்கலையோ செண்ட்! கூவிக்கூவி விற்கும் எலோன்  மஸ்க் title=

Elon Musk Perfume: உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், வாசனை திரவியம் ஒன்றை நேற்று (அக்டோபர் 13, புதன்கிழமை) அறிமுகப்படுத்தினார். ஒரு பாட்டில் வாசனை திரவியத்தின் விலை சுமார் $ 100 அல்லது ரூ 8,400 ஆகும். இந்த செண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட  சில மணி நேரங்களிலேயே பத்தாயிரம் பாட்டில்கள் விற்பனையாகி விட்டன. இந்த செண்ட், தலைமுடியை எரித்து தயாரிக்கப்படுவது என்று பெயர் இருந்தாலும், மக்கள் எலன் மஸ்க் அறிமுகப்படுத்தியதாலேயே வாங்கினார்களா என்ற கேள்வியும் எடிகிறது. வெறும் 4 மணி நேரத்தில் 10,000 பாட்டில்கள் விற்பனையானது

டெஸ்லா சிஇஓ எலோன் மஸ்க் வாசனைத் திரவியத் துறையையும் விட்டு வைக்கவில்லை. தனது சொந்த வாசனை திரவிய வரிசையான 'பர்ன்ட் ஹேர் பெர்ஃப்யூம்' அறிமுகப்படுத்தினார். தி போரிங் நிறுவனத்தின் இணையதளம் மூலம் வாசனை திரவியம் விற்பனையாகி உள்ளது. இந்த செண்டு வாங்கியதற்கான பணத்தை, Dogecoin மூலம் செலுத்தலாம்.

வாசனை திரவிய பாட்டில்களுக்கு அதிக தேவை உள்ளது

எரிந்த முடி என்பது எங்கும் காணப்படும் ஒரு பொருளாகும், இது ஆண்களும் பெண்களும் இதைப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுகிறது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி 1 மில்லியன் வாசனை திரவிய பாட்டில்கள் விற்கப்பட்டால் என்ன தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது என்பதைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.

இது தி போரிங் நிறுவனத்தின் இணையதளத்தில் தி எசன்ஸ் ஆஃப் ரெபென்டண்ட் டிசையர் என பட்டியலிடப்பட்டுள்ளது. மற்றொரு தயாரிப்பு விவரம், 'டைனிங் டேபிளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது போல, அதுவும் எந்த முயற்சியும் இல்லாமல்’ என்றும் அந்த தளத்தில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | டெங்குக் காய்ச்சல் சிகிச்சைகள்! இந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கை அவசியம்

புதிய வணிகத்தில் எலோன் மஸ்க் 

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் பயோவை திருத்தி, அதில் தன்னை ஒரு வாசனை திரவிய விற்பனையாளரையும் குறிப்பிட்டுள்ளார். மஸ்க்கின் ட்விட்டர் கணக்கு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிலதிபர் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவன பங்குகளை வாங்குவது தொடர்பான வழக்கில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.

செப்டம்பரில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப்பெரிய பணக்காரரும் முதன்முதலில் "பிரண்ட் ஹேர்" வாசனை திரவியத்தைப் பற்றி ட்வீட் செய்தனர். எரிந்த முடியின் வாசனை என்று பொருள் கொண்ட Burnt Hair Perfume வாசனை திரவியம், அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே எலொன் மஸ்கால் பிரபலமானது.

போரிங் நிறுவனம்
2018 ஆம் ஆண்டில் ஃபிளேம்த்ரோவர்களை விற்ற  "தி போரிங் கம்பெனி" தான், இந்த வாசனை திரவியத்தையும் விற்றுள்ளது. ஃபிளேம்த்ரோவர் என்பது நிறுவனத்தால் விற்கப்பட்ட $500 விலையுள்ள் சாதனமாகும்.

மேலும் படிக்க | கிரிக்கெட் வீரருக்கு தொடரும் நீதிமன்ற விசாரணை! மேலும் 5 நாட்கள் காவல் நீட்டிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News