இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம்
Israeli Hamas War: ஹமாஸுடனான போர்நிறுத்தத்திற்கு இன்று (புதன்கிழமை) இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
Israel Hamas War News In Tamil: பல நாட்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக 4 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை பாராளுமன்றம் நிறைவேற்றி உள்ளது. ஹமாஸ் தரப்பில் இருந்து விடுவிக்கப்படும் பணயக் கைதிகளில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று இஸ்ரேலிய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் ஒவ்வொரு நாளும் 12-13 பணயக்கைதிகள் கொண்ட குழுக்களாக விடுவிக்கப்படுவார்கள். 10 பணயக்கைதிகள் கொண்ட ஒவ்வொரு குழுவையும் விடுவிப்பதற்கு ஈடாக இஸ்ரேல் ஒரு நாள் போர் நிறுத்தத்தை விதிக்கும்.
ஹீப்ரு ஊடகங்களின்படி, ஹமாஸ் விடுவிக்கும் பணயக்கைதிகளில் 30 குழந்தைகள், 12 பெண்கள் மற்றும் 8 தாய்மார்கள் உள்ளனர். இது தவிர, இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் 150 பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
100 பணயக்கைதிகளுக்கு ஈடாக 300 பாலஸ்தீனியர்களை விடுவிக்க இஸ்ரேல் தயார்
டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலின் கூற்றுப்படி, இது ஒப்பந்தத்தின் முதல் கட்டம் மட்டுமே, இது சுமார் 4-5 நாட்கள் நீடிக்கும். இதற்குப் பிறகு, அடுத்த 50 பணயக்கைதிகளுக்கு ஈடாக கூடுதலாக 150 பாலஸ்தீனியர்களை விடுவிக்க இஸ்ரேல் கேட்டுள்ளது. ஒவ்வொரு 10 பணயக்கைதிகளையும் விடுவிக்க 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இது தவிர, இஸ்ரேல் வெளியிடக்கூடிய 300 பாலஸ்தீனியர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை குழந்தைகள் மற்றும் பெண்களின் பெயர்கள்.
இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் பறக்கக்கூடாது -ஹமாஸ்
அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு காசா மீது 6 மணி நேரம் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை இயக்குவதையும் இஸ்ரேல் நிறுத்தும் என்று ஹமாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ஆளில்லா விமானங்கள் வடக்கு காசாவில் மட்டுமே பறக்க முடியும்.
மேலும் படிக்க - ஐ.நா-வில் போர் நிறுத்த தீர்மானம்: இந்தியா ஏன் புறக்கணித்தது? அதற்கான காரணம் என்ன?
இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டம்
செவ்வாய்க்கிழமை இரவு 'ஜெருசலேம் போஸ்ட்' வெளியிட்ட அறிக்கையின்படி, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினர் ஹமாஸுடன் எந்த வகையான ஒப்பந்தத்தையும் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். அவர்களின் அமைப்பு தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடபட்டு உள்ளது. பணயக்கைதிகளுக்கு மாற்றாக பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டால், அது எதிர்ப்பு தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
அந்த அறிக்கையில், இன்று நாம் பயங்கரவாதிகளின் முன் பணிந்து அவர்களை விடுவித்தால், எதிர்காலத்தில் அவர்கள் மீண்டும் எங்களை குறிவைக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். இதே தவறை இதற்கு முன்பும் செய்துள்ளனர். தற்போது மீண்டும் செய்வார்கள். தீவிரவாதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது" எனக் கூறப்பட்டு உள்ளது.
ஹமாஸ் தலைவரின் பேரன் கொல்லப்பட்டார்
மறுபுறம், காஸாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் பேரன் ஜமால் முகமது ஹனியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த தகவல் பல ஊடகங்களில் வெளியானது. இதற்கு சில நாட்களுக்கு முன், ஹனியேவின் பேத்தியும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார். காசா பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவியாக இருந்தார்.
போர் நிறுத்த திரைக்குப் பின்னால் துருக்கியின் முக்கிய பங்கு
'நியூயார்க் டைம்ஸ்' செய்தியின்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தில் துருக்கியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் தானே வெளிப்படுத்தினார். தனது வெளியுறவு அமைச்சரும் உளவுத்துறை தலைவரும் பல நாட்களாக போர் நிறுத்தத்திற்காக உழைத்து வருவதாக அவர் கூறினார். இதில் கத்தாரின் பங்கு முக்கியமானது.
எர்டோகன் கூறுகையில், இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவோம், அது அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கும். எதிர்காலத்திலும் இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து பேசுவோம்" என்றார்.
சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளது
காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் திங்கள்கிழமை விவாதிக்கப்பட்டது. இதன் போது ஐ.நாவுக்கான இந்திய தூதர் ருசிரா கம்போஜ் கூறுகையில், சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. போரினால் காஸாவில் மனிதாபிமான நிலைமையை மேம்படுத்த அனைத்து முயற்சிகளிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது என்றார்.
பாலஸ்தீன் நாட்டை ஆக்கிரமித்து இரு நாடுகள் தீர்வு?
மே 14, 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இங்கு பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளின் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நிலைமை மிகவும் மாறுபட்டதாக இருந்திருக்கும்.
இஸ்ரேல் நாடு எப்பொழு உருவாக்கப்பட்டது?
1947 இல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பிரிவினையை முன்மொழிந்தது. இதில் மும்முனைப் பிரிவு குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. அதாவது ஜெருசலேமை சர்வதேச கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதேசமயம், யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் தனி நாடுகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. இம்முறையும் யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள் ஆனால் அரபுத் தலைவர்கள் அதை எதிர்த்தனர். 1948ல் மே 14 அன்று இஸ்ரேல் நாடு (State of Israel Declare) உருவாக்கப்பட்டது.
சர்வதேச அளவில் இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிப்பு
தற்போது இஸ்ரேல் தனி நாடாக இருந்தாலும் பாலஸ்தீனம் தனி நாடாக இல்லை. 1948 இல் உருவாக்கப்பட்ட இஸ்ரேல், அடுத்த ஆண்டே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இஸ்ரேல் மே 11, 1949 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ளது. இதைத் தவிர பாலஸ்தீனம் இன்னும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ