'ஜீரோ-கோவிட்' கொள்கையை நீக்குவது என்பது கொரோனா வைரஸை கட்டவிழ்த்து விடுவதற்கு ஒப்பானது என்று சீன ஆய்வு கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. சீன அரசு விதித்துள்ளபூஜ்ஜிய-கோவிட் கொள்கை மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், இது தொடர்பான ஒரு புதிய ஆய்வு வெளியாகி அச்சங்களை அதிகரித்துள்ளது.


கொரோனாவின் பரவலால் தொழிற்சாலைகளை மூடிய ஜீரோ கோவிட் என்ற கடுமையான கொள்கையை நீக்குவது "தொற்றுநோய்களின் சுனாமி" என்பது போல் பேரலையை எழுப்பும் என்றும், கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்களின் மரணத்திற்கு வழிகோலும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.


இது, தற்போதும் கொரோனாவின் கொடும்கரங்கள் உலகை விட்டு நீங்கவில்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால், கோவிட் கட்டுப்படுத்துவது தொடர்பாக சீன அதிகாரிகளால் பலவந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சர்ச்சைகளை அதிகமாக்கியுள்ள நிலையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | விமான பயணத்தில் மாஸ்க் கட்டாயமில்லை; கொரோனா விதிகளை தளர்த்தியது EU


நேச்சர் ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு வெளிப்படுத்தும் உண்மைகள் அச்சத்தை அதிகரித்துள்ளது. ஷாங்காய் ஃபுடான் பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில், சீனாவில் முதியவர்களுக்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசி போடப்பட்டிருப்பதால் கோவிட்க்கு எதிராக இத்தகைய வலுவான நடவடிக்கை தேவை என்று கூறப்பட்டுள்ளது.


கோவிட் நோய்த்தொற்றுக்கு எதிரான சீனாவின் கடுமையான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தினால் 112 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட்-19 அறிகுறியுடன் கூடிய பாதிப்பு ஏற்படலாம் என்றும், மக்களுக்கு சிகிச்சையளிக்க தோராயமாக ஐந்து மில்லியன் மருத்துவமனைகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த அலையில் 1.55 மில்லியன் இறப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இந்த ஆராய்ச்சி கூறுவதாக, தி கார்டியன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.


"மார்ச் 2022 தடுப்பூசி பிரச்சாரத்தால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு ஓமிக்ரான் அலையைத் தடுக்க போதுமானதாக இல்லை என்று கண்டறிந்துள்ளோம், இதன் விளைவாக தீவிர சிகிச்சைப் பிரிவின் உச்சக் கோரிக்கை தற்போதுள்ள திறனை விட 15.6 மடங்கு அதிகமாக இருக்கும்" என்று அந்த செய்தித்தாள் கூறியது.


மேலும் படிக்க | கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க: ஜீ ஜின்பிங்


எது எவ்வாறு இருந்தாலும், தடுப்பூசிகள் மற்றும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கான அணுகல் மற்றும் "மருந்து அல்லாத தலையீடுகளை செயல்படுத்துதல்" ஆகியவற்றைப் பராமரித்தால், சுகாதார அமைப்பு பலவீனமாவதை தடுக்க அதிகாரிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.


இந்த காரணிகள் கோவிட் தொடர்பான எதிர்கால கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தலாம் என்றும் பரிந்துரைத்தது.


இந்த சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையில் கடந்த வாரம் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ஓமிக்ரான் வைரஸின் சவால்களை எதிர்கொள்ள தங்களது முயற்சி தொடரும் என்று தெளிவுபடுத்தினார்.



மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்


பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் சீன அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.


சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை தொடர்பாக, உலகம் முழுவதும் இருந்து வரும் விமர்சனங்களை அடுத்து, கோவிட் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பாக அதிபர் ஜி ஜின்பிங், சீன மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார்


ஜீரோ-கோவிட் கொள்கைக்கு எதிராக சீன மக்கள் புகார் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


கடுமையான லாக்டவுனால் மக்களின் வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிறுவனத்தின் வளாகத்திலேயே தங்க வைத்துள்ளன. 


மேலும் படிக்க | கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை...அதிர்ச்சியூட்டும் காணொலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR