புதுடெல்லி: மாலத்தீவில் உள்ள விமான தளங்களில் நிறுத்தப்பட்டுள்ள தனது இராணுவ வீரர்களுக்கு பதிலாக ''திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை'' நியமிக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்தது. மாலத்தீவு தலைநகர் மாலேயில் இருந்து இந்தியப் படைகளை திரும்பப் பெற முகமது முய்சு தலைமையிலான அரசு கோரிகை விடுத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உயர்மட்டக் குழுக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டுள்ளது, சமீபத்திய கூட்டம் புதுதில்லியில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.


செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், தற்போதைய பணியாளர்களுக்குப் பதிலாக, திறமையான இந்திய தொழில்நுட்ப பணியாளர்களை அங்கு பணியமர்த்துவது அவசியம் என்று கூறினார்.


சந்திப்புக்குப் பிறகு, தகவல் தெரிவித்த மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், இந்தியா மூன்று விமான தளங்களில் ஒன்றிலிருந்து மார்ச் 10-ஆம் தேதிக்குள் மாற்றுச் செயல்முறையைத் தொடங்கும் என்றும், மே 10-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறை நிறைவடையும் என்று தெரிவித்தது.


மாலத்தீவு மக்களுக்கு தேவைப்படும் மனிதாபிமான மற்றும் மருத்துவ வெளியேற்ற சேவைகளை வழங்க இந்திய விமான தளங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பேஸ்புக் நேரலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சிவசேனா பிரமுகரின் மகன்! பீதி கிளப்பிய ஃபேஸ்புக் லைவ்!


அரசியல் மாற்றங்களுக்கு இடையில் பட்ஜெட் ஒதுக்கீடு
இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான மாலத்தீவு அதிபரின் கோரிக்கை, அவர் தேர்தலில் தன் நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் முக்கியமான விஷயங்களிலும் அரசியல் இருப்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


மாலத்தீவில் சுமார் 70 இந்திய ராணுவ வீரர்களும், சில விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.  2024-25 இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவிற்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் இருக்காது என்ற ஊகங்களுக்கு மத்தியில், 779 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதை இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தினார். இது வளர்ச்சி தொடர்பான இந்தியாவின் பங்களிப்பை நிரூபிக்கிறது.


மாலத்தீவு -  பொருளாதார சவால்கள்
சர்வதேச நாணய நிதியம் (IMF) மாலத்தீவு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை பட்டியலிடுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வலுவான பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், நிதிப் பற்றாக்குறையும், கடன் அதிகரிப்பும், நாட்டின் ஒட்டுமொத்த கடனை அதிகரித்துள்ளது.


பாதிப்புகளைத் தணிக்கவும், பொது நிதிகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நீடித்த நிதி ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான அவசரத் தேவையை ஐ.எம்.எஃப் சுட்டிக் காட்டுகிறது.


காலநிலை மாற்றத்தின் தாக்கம்
கடலால் சூழப்பட்டுள்ள மாலத்தீவு காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது, வெள்ளம் மற்றும் கடல் நீர்மட்ட உயர்வு காரணமாக பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுவது கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற கூடுதல் நிதியுதவி அவசியம் என்று IMF பரிந்துரைத்துள்ளது.


மேலும் படிக்க - INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ