Ramzan-னிலும் நோன்பை கடைபிடிக்க அனுமதி இல்லை: China-வில் கொடுமைப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள்!!
சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதப் பெயர்களை வைக்கக் கூட அனுமதிக்கப்படுவதில்லை.
திருவனந்தபுரம்: பெய்ஜிங்கின் ‘ஜின்ஜியாங் செயலுத்தி’ சரியானது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) வெட்கமின்றி விவரித்த பின்னர், உலக உய்குர் காங்கிரஸ் தலைவர் டோல்குன் ஈசா, சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சீனாவின் பொய்களைப் பற்றி கெள்வி எழுப்பினார்.
டோல்குன் ஈசா நாடுகடத்தப்பட்டு ஜெர்மனியில் வசித்து வருகிறார். ‘உய்குர் முஸ்லிம்கள் (Uyghur Muslims) மற்றும் சீனாவின் மனித உரிமை மீறல்’ என்ற வெபினாரில் பங்கேற்றபோது, புனித ரம்ஜான் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடிக்க கூட சீனாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கு அனுமதி இல்லை என்று ஈசா கூறினார். ரம்ஜானின் (Ramzan) போது, முஸ்லிம்கள் "சமூக சமையலறைகள் மூலம் பலவந்தமாக உணவளிக்கப்படுகிறார்கள்" என்று அவர் கூறினார்.
கேரளாவின் (Kerala) திருவனந்தபுரத்தில் உள்ள கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் மையத்தால் இந்த வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டது.
சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதப் பெயர்களை வைக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்று ஈசா மேலும் கூறினார். வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது சீன அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்டர்போல் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று ஈசா மேலும் தெரிவித்தார்.
"சீன கம்யூனிஸ்ட் கட்சி சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களின் அனைத்து மனித உரிமைகளையும் மறுத்து வருகிறது. அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதப் பெயர்களை வைக்கக் கொடுக்க கூட அனுமதிக்கப்படவில்லை." என்றார் அவர்.
"அங்குள்ள ஆளும் கட்சி மேற்கு நாடுகளில் கூட நாடுகடத்தப்பட்ட உய்குர் செயற்பாட்டாளர்களை துன்புறுத்துகிறது. சீன அரசாங்கத்தின் மனித உரிமை மீறலுக்கு எதிராக பேசும் உய்குர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் துரத்தவும் இன்டர்போல் பயன்படுத்தப்படுகிறது." என்று ஈசா குற்றம் சாட்டினார்.
சீனாவுடனான வணிகத்தைக் குறித்து பேசுகையில் ஈசா, “உலகம் சீனப் பொருட்கள் மற்றும் சீன வணிகங்களைத் தடுக்கவில்லை என்றால், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கடந்த காலத்தின் ஒரு விஷயமாகிவிடும்.” என்று கூறினார்.
ALSO READ: இந்தியா சீனா இடையில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: Donald Trump
இதற்கிடையில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட, ‘கேம்பைன் 4 உய்குர்ஸின்’ நிறுவனரும் தலைவருமான ருஷன் அப்பாஸ், சீன அரசாங்கம் உய்குர்கள் மற்றும் திபெத்தியர்களின் அடிமைத்தனத்தையும் இனப்படுகொலையையும் ஒரு செயல்முறையாக கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். சீன அரசாங்கத்தால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவரான தனது சகோதரி குல்ஷன் அப்பாஸ் பற்றியும் அவர் பேசினார். அவரது தங்கை கடத்தப்பட்டு, பிறகு சீனர்களால் நடத்தப்படும் முகாம்களில் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
"அமெரிக்கா (America) ஏற்கனவே சீனாவுக்கு எதிரான பொருளாதார முற்றுகையைத் தொடங்கியுள்ளதுடன், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சிறுபான்மை உய்குர் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இனப்படுகொலை மற்றும் அடிமைத்தனத்திற்கு எதிராக முஸ்லிம் உலகம் செயல்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது " என்றும் அப்பாஸ் கூறினார்.
இதற்கிடையில், சீனாவின் பகுப்பாய்வு மற்றும் மூலோபாயத் தலைவரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஜெயதேவா ரனாடே, சீனாவிற்கு எதிராக இந்தியா (India) தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டார். LAC-யில் இந்தியா தன் பலத்தைக் காட்டியதோடு மட்டுமல்லாமல், நாட்டில் சீன தயாரிப்புகளை தடை செய்வதன் மூலமும் சீனாவுக்கு சரியான பதிலை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கம் சீனாவிற்கு (China) பொருளாதார இழப்பை எவ்வாறு ஏற்படுத்தியது என்பதை ரானடே கோடிட்டுக் காட்டினார்.
செப்டம்பர் 26 அன்று முடிவடைந்த இரண்டு நாள் வேலை மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், சின்ஜியாங்கில் (Xinjiang) பின்பற்றப்பட்ட தனது நாட்டின் செயலுத்தி சரியானது என்று விவரித்தார். மேலும் அது “நீண்ட காலத்திற்கு கடைபிடிக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
இதற்கிடையில், தன்னை மிகப்பெரிய இஸ்லாமிய நாடு என்றும் இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்றும் கூறிக்கொள்ளும் பாகிஸ்தான் (Pakistan) உய்குர் முஸ்லிம்களுக்கு சீனாவில் நடக்கும் அட்டூழியங்களை மட்டும் கண்டும் காணாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை!!
ALSO READ: Viral Video: ‘வேண்டாம்…..விட்டுடு’ என வடிவேலு style-ல் அழும் சீன வீரர்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR