Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!
உலகின் மர்மமான ஏரியான ஃபுண்டுஜி, இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால், எமன் உயிரைக் குடித்து விடுவாராம்!
இந்த பூமி பல மர்மங்களைக் கொண்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை தன்னுள் பல ரகசியங்களை பொதித்து வைத்துள்ளது. மனிதர்களால் அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன.
இருப்பினும், மனிதர்களின் விடா முயற்சி, இந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க விளைகிறது.
அவற்றில் சில வெற்றியடைந்தாலும், பெரும்பாலும் ரகசியங்கள் மர்மமாகவே தொடர்கின்றன. அப்படி மர்மமாய் தொடரும் ஒரு ஏரி தென்னாப்பிரிக்காவின் ஃபுண்டுஜி.
பார்ப்பதற்கு பேரழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
ஏனெனில் தனது தண்ணீரை குடிப்பவர்களின் உயிரை இந்த ஏரி குடித்துவிடுமம்!
மேலும் படிக்க | இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு
தண்ணீர் தெளிவாக உள்ளது
உலகில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகளில் சிலவற்றின் ரகசியங்களை மனிதனால் இன்றுவரை அறிய முடியவில்லை. தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாநிலத்தில் உள்ள புண்டுஜி ஏரி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது, இதன் நீர் மிகவும் தெளிவாக உள்ளது, ஆனால் இதன் தண்ணீரை யாராய் இருந்தாலும் தங்கள் வாழ்நாளில் ஒரேயொரு முறை தான் குடிக்க முடியும்!
ஏன் தெரியுமா? ஒரு முறை இந்த நீரைக் குடிப்பவர்கள், அதன் பிறகு, மாண்டவர்களாகிவிடுவார்கள். மரணத்தின் கோரப்பிடிக்குள் சிக்க வைக்கும் மீளமுடியா ரகசியத்தை இந்த ஏரி தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது.
நிலச்சரிவு காரணமாக உருவான ஏரி
முன்பொரு காலத்தில் நிலச்சரிவினால் அங்கு ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டு இந்த ஏரி உருவானதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏரியின் தண்ணீரைக் குடித்தால் மரணம் ஏற்படுவது ஏன் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது.
மேலும் படிக்க | விந்தையுலகம்! சுவற்றிலும் ஆண்குறி! நாற்காலியிலும் ஆணுறுப்பு
ஏரியைப் பற்றிய கதைகள்
ஏரியைப் பற்றி ஒரு உள்ளூர் கதையும் உள்ளது. இதன்படி பழங்காலத்தில் தொழுநோயாளி ஒருவர் நீண்ட பயணத்திற்குப் பிறகு இந்த இடத்திற்கு வந்துள்ளார். உள்ளூர் மக்களிடம் உணவும், தங்க இடமும் கேட்டபோது, கொடுக்கவில்லை. அதன் பிறகு தொழுநோயாளி மக்களை சபித்துவிட்டு ஏரியில் மறைந்தார்.
தண்ணீருக்கு தவித்த நோயாளியின் சாபமே, இந்தப் பகுதி மக்கள், ஏரி நீரை பருகினால் மரணிப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல,
ஏரிக்குள் மூழ்கி இறந்தவர்களின் அழுகுரல்களும், கூக்குரல்களும் தொடர்ந்து ஒலிப்பதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு நம்பிக்கையின்படி, இந்த ஏரியை ராட்சத மலைப்பாம்பு பாதுகாத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | சிறியளவு ஆண்குறி கொண்ட ஆண்களுக்கான ப்ரத்தியேக டேட்டிங் தளம்.
இந்த மலைப்பாம்பு உள்ளூர் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பாம்புக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்தப் பகுதி மக்கள் ஆண்டுதோறும் நடன விழாவை நடத்துகிறார்கள். இதில், திருமணமாகாத பெண்கள் நடனமாடுகின்றனர்.
ரகசியத்தை அறிய முயன்ற நபர்
1946 ஆம் ஆண்டு ஆண்டி லெவின் என்ற நபர் ஏரியின் மர்மத்தை அவிழ்க்க முயன்றதாக கூறப்படுகிறது. தண்ணீரின் உண்மையை அறிய அவர் இங்கு வந்தார். ஏரியில் இருந்து கொஞ்சம் தண்ணீரையும், அந்தப் பகுதியில் இருந்த சில தாவரங்களையும் எடுத்துக் கொண்டு சென்றார்.
சேகரித்தப் பொருட்களுடன் சென்றுக் கொண்டிருந்த அவர் வழி தவறிவிட்டார். தன்னிடம் இருந்த தண்ணீரையும் செடிகளையும் வீசி எறியும் வரை அவரால் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவர் உயிர் பிழைத்தாலும், சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் படிக்க | உடலுறவின் போது உடைந்த ஆணுறுப்பு! இப்படி எல்லாம் நடக்குமா?
ஒவ்வொரு முறையும் தோல்வி
இதற்குப் பிறகும், இந்த ஏரியின் ரகசியத்தை அறிய பலர் முயன்றனர், ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தனர். முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழி இந்த மர்மமான ஏரியின் ரகசியத்தை அறிய பயன்படவில்லை.
இந்த தண்ணீரை குடித்தவர்கள் ஏன் இறக்கிறார்கள் என்பதை இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏரியில் விஷ வாயு கலந்திருக்கலாம் என சிலர் நம்புகின்றனர். ஆனால், இதற்கான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த ஏரி சொல்லும் தாரக மந்திர மந்திரம், “என்னைப் பார் என் அழகைப் பார்; ஆனால் என்னை குடிக்காதே! மீறினால், நான் உன் உயிரைக் குடித்துவிடுவேன்”.
மேலும் படிக்க | 1500 கிமீ தூரம் விலகிச் செல்லும் நேபாளத்தின் ‘உயிருள்ள’ நிலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR