2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக (Nobel Peace Prize 2021) பரிந்துரைக்கப்படும் பெயர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny), சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg ), உலக பொது சுகாதார அமைப்பு (WHO) ஆகிய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump )இரண்டாவது முறையாக இந்த பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள்  ஆகியோர், அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பல்வேறு பெயர்களை பரிந்துரைத்துள்ளனர். 


இது தவிர இனவெறிக்கு எதிராக இயக்கமான ‘BLACK LIVES MATTER’  பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2020 மே மாதம் செய்திகளில் பிரபலமாகத் தொடங்கியது பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) இயக்கம்.


உண்மையில், 2013 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்டது இந்த இயக்கம். கடந்த ஆண்டு அமெரிக்க காவல்துறையினரின் நடவடிக்கையில் ஜார்ஜ் ஃபிலாய்ட் (George Floyd) என்ற கறுப்பின நபரை இறந்ததையடுத்து இந்த இயக்கம் உலகம் முழுவதும் பிரபலமானது. 


2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பட்டியலை பரிசீலிக்கும் நோபல் கமிட்டி குழு வரும் அக்டோபரில் நோபல் பரிசு பெருபவரின் பெயரை அறிவிக்கும்.


கடந்த ஆண்டு ஐ.நாவின் (UN) உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. 


ALSO READ | பெண்களை இழிவுபடுத்துவதாக புகார்.. லோகோவை மாற்றியது Myntra..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR