பெண்களை இழிவுபடுத்துவதாக புகார்.. லோகோவை மாற்றியது Myntra..!!

மும்பையைச் சேர்ந்த இந்த சமூக ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்திய பேஷன் இ-டெய்லர்  நிறுவனமான மிந்த்ரா மைன்ட்ரா தனது லோகோவை மாற்றியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 31, 2021, 08:13 PM IST
  • மிந்த்ராவின் (Myntra) லோகோ, வலைத்தளம், செயலி மற்றும் பேக்கேஜிங் பொருள் ஆகிய அனைத்திலும் மாற்றப்படும்.
  • இந்த விஷயம் குறித்து நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர் வினை இருந்தது.
  • பிளிப்கார்ட் குழும நிறுவனமான மிந்த்ரா நாட்டின் மிகப்பெரிய பேஷன் இ-ரிடைல் விற்பனையாளர்களில் ஒன்றாகும்.

Trending Photos

பெண்களை இழிவுபடுத்துவதாக புகார்.. லோகோவை மாற்றியது Myntra..!! title=

அவெஸ்டா அறக்கட்டளை சேர்ந்த நாஸ் படேல் கடந்த மாதம் மும்பையில் உள்ள சைபர் பிரிவில் அளித்த புகாரில், பிராண்டின் லோகோ, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மும்பையைச் சேர்ந்த இந்த சமூக ஆர்வலர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்திய பேஷன் இ-டெய்லர்  நிறுவனமான மிந்த்ரா மைன்ட்ரா தனது லோகோவை மாற்றியுள்ளது

மிந்த்ராவின் (Myntra) லோகோ வலைத்தளம், செயலி மற்றும் பேக்கேஜிங் பொருள் ஆகிய அனைத்திலும் மாற்றப்படும்.

ஒரு ட்வீட்டில், அவெஸ்டா அறக்கட்டளை: "எங்கள் நிறுவனருக்கு வாழ்த்துக்கள், சாத்தியமற்றது என்று நினைத்ததை அவர் சாதித்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி. உங்களது ஆதரவை நினைத்து நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். லட்சக்கணக்கான பெண்களின் உணர்வுகளை மதித்து நடவடிக்கை எடுத்த மிந்த்ரா நிறுவனத்திற்கு நன்றி என ட்வீட் செய்துள்ளார். "

இருப்பினும், இந்த விஷயம் குறித்து நெட்டிசன்களிடமிருந்து கலவையான எதிர் வினை இருந்தது. லோகோவை மாற்றுவதற்கான நிறுவனத்தின் முடிவை சிலர் வரவேற்றாலும், லோகோ மாற்றங்களுக்கான இத்தகைய கோரிக்கைகள் வினோதமாக உள்ளது என்று பலர் கூறினர்.

ஒரு சிலர் புகார் வந்ததால் தான் லோகோவின் அமைப்பை எலோரும் கவனித்தனர் என்றும், இல்லையெனில் யாரும் இதை கவனித்திருக்க மாட்டார்கள் என்றும் கூறினர். 

பிளிப்கார்ட் (Flipkart) குழும நிறுவனமான மிந்த்ரா நாட்டின் மிகப்பெரிய பேஷன் இ-ரிடைல் விற்பனையாளர்களில் ஒன்றாகும். கடந்த மாதம் அதன் 'எண்ட் ஆஃப் ரீசன் சேல்' போது, ​​5 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களைப் பூர்த்தி செய்து 11 மில்லியன் பொருட்களை விற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தாண்டவ் சர்சை எதிரொலி; OTT தளங்களுக்கான புதிய விதிமுறைகள் விரைவில்..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News