தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் சிஐஏ சேர்ந்து கொண்டு வடகொரிய அதிபரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக வடகொரியா குற்றச்சாட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாவது:-


சிஐஏ மற்றும் சியோல் உளவுச்சேவை அமைப்பு அடையாளம் தெரியாத ரசாயனத்தைப் பயன்படுத்தி அதிபரைக் கொலை செய்ய திட்டமிட்டு வருகின்றனர். சிஐஏ-வுக்கு கதிர்வீச்சு, நுண் நச்சு வேதிப்பொருள், ரசாயனம் ஆகியவற்றைக் கொண்டு அதிபரைக் கொலை செய்வதென்பது கைவந்த கலை. அதாவது இந்தவகையில் 6 அல்லது 12 மாதங்கள் சென்ற பிறகு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக திட்டமிடப்படுவதாக வடகொரியா கூறியுள்ளது என அரசு இதழில் செய்தி வெளியாகியுள்ளது.


சிஐஏ பயங்கரவாதிகளின் மற்றும் அமெரிக்காவின் பொம்மை ஐஎஸ் தென் கொரியாவின் இந்த முயற்சிகளை அடித்து நொறுக்குவோம். இந்த கொலை முயற்சி போர் அறிவிப்புக்கு சமமாகும். இத்தகைய கொடூரமான குற்றம் ஒரு வகையான பயங்கரவாதமாகும் என்று பாதுகாப்பு அமைச்சக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து வடகொரியா நெடுகிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.