வட கொரியாவில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தால் ஒரு வேளை கொரோனாவிலிருந்து தப்பினாலும் தப்பலாம். ஆனால் மரணம் நிச்சயம்.  இப்படி ஒரு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட கொரியாவின் சர்வாதிகாரியான கிங் ஜாங்  (Kim Jong Un) ஒரு கொடுங்கோலன் என்பது உலகறிந்த விஷயம். அவர் வழங்கும் உத்தரவுகளும் தீர்ப்புகளும் பயங்கரமானவை, கொடூரமானவை, வினோதமானவை. 


இப்போது, மீண்டும் ஒரு புதிய உத்தரவின் மூலம் மக்களுக்கு மரண பயம் காட்டியுள்ளார். கொரோனா விதிமுறையை மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா தொற்று நோயைத் தடுக்க வட கொரியாவில் (North Korea) கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. விதியைப் பின்பற்றாதவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. இதில் மரணதண்டனையும் இதில் அடங்கும். வட கொரியாவில் மரண தண்டனை என்பது சர்வ சாதாரணமாக வழங்கப்படும் தண்டனை.


ALSO READ | உற்ற நண்பன் சீனா உதவியுடன் கிம் ஜாங் உன்னிற்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா..!!!


கோவிட் -19 (COVID-19) தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதால் ஒருவர் சமீபத்தில் வட கொரியாவில் உயிர் இழந்தார். கொரோனாவினால் அல்ல, விதிகளை மீறியதால், துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்


கொரோனா விதிகளை மீறினால் என்ன நடக்கும் என  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த கிம் உத்தரவின் பேரில் வட கொரியாவின் இராணுவம் நடு வீதியில்  துப்பாக்கிச் சூடு நடத்தியது என்று Radio Free Asia என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


 கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ​​மார்ச் மாதத்திலிருந்து வடகொரியா தனது எல்லையை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர், வட கொரியாவுக்குள் சீனப் (China) பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், பொருளாதாரத் தடைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. ​​அவரை உள்ளூர் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் துப்பாக்கிச் சூடு  நடத்தி அவரை நடு வீதியில் சுட்டுக் கொன்றனர்.


கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வட கொரியாவில் எந்தவிதமான தகவலும் பதிவாகவில்லை என்று வட கொரியா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. ஆனால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் அதை சந்தேகிக்கின்றன. வட கொரியாவில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிவது மிக கடினம்.  மர்மங்கள் நிறைந்த நாடாக உள்ளது வடகொரிய


ALSO READ | அமைச்சர் அனில் விஜ் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி பலனளிக்காதது ஏன்..!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR