லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் கவலைகளை அதிகரித்த நிலையில், அதற்கான தீர்வை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பெற முடிவு செய்யபப்ட்டுள்ளது. 2022 ஏப்ரலில் ஓபியம் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான பயிர்களை பயிரிடுவதற்கு தலிபான்கள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டவிரோதமாகப் பயிரிடப்படும் பயிர்களைக் கண்காணிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்திற்கு (United Nations Office on Drugs and Crime (UNODC) தங்கள் ஆராய்ச்சியாளர்கள் உதவுகிறார்கள் என்று, ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட க்ரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம், அண்மையில் (2023, ஜனவரி 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் அபின் உற்பத்தி


பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஓபியம் சாகுபடி எங்கு நடைபெறுகிறது என்பதைக் கண்காணிக்க செயற்கைக்கோள்களின் தரவு பயன்படுத்தப்படும். ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஐ.நா. ஏஜென்சி நடத்திய ஆய்வுகள் வெளியான  சில மாதங்களுக்குப் பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது.


கடந்த ஆண்டு 2022 ஏப்ரலில் ஓபியம் மற்றும் அனைத்து போதைப் பொருட்களையும் பயிரிடுவதற்கு தலிபான்கள் தடை விதித்த பின்னர், போதைப்பொருட்கள் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிவந்துள்ள முதல் செய்தி இது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி அட்ராசிட்டி செய்த பெண்: தருமபுரியில் பரபரப்பு


இதற்கு முன் வெளியான தகவல்களின்படி, குறைந்தபட்சம் 80 சதவிகிதம் சட்டவிரோத அபின் காபூலில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது.  


"இது மிகவும் முக்கியமான திட்டமாகும். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, பெரிய அளவில் உற்பத்தியாகும் ஓபியம் அதிகக் கவலைகளைத் தருவ்து. எனவே, சட்டவிரோதமாக பயிரிடப்படும் பயிர்களை கண்காணிக்க தொழில்நுட்பத்தின் உதவியை நாடுகிறோம்" என்று கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை உணர்திறன் பேராசிரியர் டாக்டர் டேனியல் சிம்ஸ் கூறினார்.


கண்காணிப்பு செயல்முறையை தானியக்கமாக்குவதால், ஏற்படும் நன்மைகள் உட்பட நேர சேமிப்பு, துல்லியமான கண்காணிப்பு என பல விஷயங்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். ஐ.நா.வுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான கூட்டாண்மை ஜூலை 2023 வரை நீடிக்கும்.


UNODC கண்டுபிடிப்புகளின்படி, தலிபான் தடையை விதித்ததில் இருந்து, அபின் விலைகள் உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் ஓபியம் விற்பனை மூலம் விவசாயிகளின் வருமானம் 2021 இல் $425 மில்லியனில் இருந்து 2022 இல் $1.4 ஆக,அதாவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.


"ஆப்கானில் ஏற்பட்டிருக்கும் பெரிய அளவிலான இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்ய சர்வதேச சமூகம் பணியாற்ற வேண்டும். உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஹெராயின் கடத்தல் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கிரிமினல் குழுக்களை தடுக்க மக்களை ஊக்கப்படுத்துவதன், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்" என்று UNODC நிர்வாக இயக்குனர் காடா வாலி கேட்டுக் கொண்டிருந்தார். 


மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ