இஸ்லாமாபாத்: உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் நாடான பாகிஸ்தான் (Pakistan) , இளைஞர்களிடையே இருக்கும் டேட்டிங் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது. டேட்டிங் செயலிகள் இளைஞர்களிடையே பிரபலமடைவதை பாகிஸ்தான் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தனது கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி உலகின் ஐந்து பெரிய செயலியகளை தடை செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செயலிகள் 'ஒழுக்கக்கேடானவை' – பாகிஸ்தான்


'ஒழுக்கக்கேடானவை’ (Immoral Apps) என குற்றம் சாட்டி, செவ்வாயன்று பாகிஸ்தான், டேட்டிங் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் தொடர்பான ஐந்து செயலிகளை (Applications) தடை செய்தது. 'டிண்டர்' (Tinder), 'டேக்ட்' (Tagged), 'ஸ்கௌட்' (Scout), 'க்ரிண்டர்' (Grindr) மற்றும் 'சே ஹாய்' (Say Hi) ஆகிய செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அகற்ற தவறி விட்டார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிவிப்புக்கு பதிலளிக்காததால், அவற்றை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ: பொய்களை அள்ளி விடும் பாகிஸ்தான்... அம்பலப்படுத்திய இந்தியா..!!!


பெறப்பட்ட தகவல்களின்படி, தகாத உறவுகள் (Extra Marital Relationship) மற்றும் ஓரினச்சேர்க்கை (Homosexuality) பாகிஸ்தானில் சட்டவிரோதமானது. இந்த இரண்டு வகையான உறவுகளும் இந்த டேட்டிங் செயலிகள் பலவற்றில் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த காரணத்தால்தான், இந்த ஐந்து செயலிகளிடமிருந்து பாகிஸ்தான் அரசு (Pakistan Government) இந்த பிரச்சினைகளுக்கு விடை கோரியது.  இருப்பினும், இந்த விஷயத்தில் எந்த செயலியின் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.


தரவு பகுப்பாய்வு (Data Analytics) நிறுவனமான சென்சார் டவர் கருத்துப்படி, டிண்டர் செயலி, கடந்த ஆண்டுக்குள் சுமார் 4.40 லட்சம் முறை பாகிஸ்தானில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, Grindr, Tagged மற்றும் Say Hi ஆகியவையும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் Scout செயலி சுமார் 1 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் டவர் கூறுகிறது.


ALSO READ: கத்திரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்தது... தாவூத் முகவரியை பாகிஸ்தான் வெளியிட்டது..!!!