Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் காலமானார்
Pervez Musharraf Death: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த பர்வேஸ் முஷாரப்பின் கடைசி காணொளியில் அவரால் நடக்க முடியவில்லை என்பதைக் காட்டியது.
பர்வேஸ் முஷாரப் காலமானார்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
1943-ல் சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தார் பர்வேஸ் முஷாரப். தேச பிரிவினையின் போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம்பெயர்ந்தது. 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.
பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவத் தளபதியும் அதிபரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டில் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து இராணுவ சதிப்புரட்சி மூலம் நாட்டின் அதிபரானார். பதவியேற்றவுடன் இராணுவப் பதவியைக் கைவிடுவதாக அறிவித்த போதும் அதனைச் செய்ய மறுத்தார். இனிவரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இராணுவத் தளபதிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ஒருவழியாக பலூனை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா... அடுத்தது என்ன?
2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி விலக்கியதில் இருந்து மக்கள் மத்தியில் இவரது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. மேலும் 2007 ஜூலை மாதம் இவரது கட்டளைப்படி இஸ்லாமாபாத்தின் செம்மசூதியை ஒரு வாரம் வரையில் முற்றுகையிட்டிருந்த பாகிஸ்தானிய இராணுவம் உள்நுழைந்து அதில் தங்கியிருந்த அல்-கைடா ஆதரவுத் தீவிரவாதிகளைக் கொன்றது. பின்னர் 2008இல் ஆகஸ்ட் 18ஆம் தேதி, இவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.
துபாயில் சிகிச்சை நடந்து வந்தது
முஷாரப் மார்ச் 2016 இல் சிகிச்சைக்காக துபாய் சென்றார். அதன் பிறகு அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு முன்பும், அவரது மரணம் குறித்த செய்தி பலமுறை வந்தாலும், அவரது குடும்பத்தினர் அந்த செய்திகளை மறுத்தனர். அவர் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது பலமுறை வென்டிலேட்டரில் இருந்தார். ஆனால் இந்த முறை அவர் வாழ்க்கைப் போரில் தோல்வி அடைந்தார்.
மேலும் படிக்க | அப்பாடா டிவிட்டர் தொல்லை முடிஞ்சுபோச்சு! நிம்மதி பெருமூச்சு விடும் எலான் மஸ்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ