சீனாவின் ராட்சத பலூன் அமெரிக்காவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனை அந்நாட்டினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்நாட்டின் கிழக்கு கடற்கரையில் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், வட அமெரிக்கா முழுவதும் உள்ள ராணுவ தளங்களில் சீனாவின் ராட்சத பலூன் உளவு பார்த்ததாக அமெரிக்கா கூறியது.
"இந்த பலூனை சுட்டு வீழ்த்திய சம்பவத்தின் மூலம், அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழு எப்போதும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முதலிடம் கொடுப்பதை நிரூபிக்கிறது, அதே நேரத்தில் சீனாவின் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களுக்கு தக்க பதிலடியையும் அளிக்கிறது" என்று பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறினார்.
An F-22 scores a hit. There isn’t much a Chinese spy ballon is going to see that you can’t see on Google Earth. So do you suppose it was monitoring our radar and electronic countermeasures? I’m guessing they dropped it in the water so we could retrieve it relatively intact. pic.twitter.com/RbGWIlnSNl
—Scotty February 5, 2023
மேலும் படிக்க | அமெரிக்காவை அலறவிடும் ராட்சத பலூன்... இவ்வளவு பெருசா - எப்போதும் வெளியேறும்?
உள்ளூர் ஊடகங்களில் வெளியான காட்சிகள் ஒரு சிறிய வெடிப்பைக் காட்டியது. அதைத் தொடர்ந்து பலூன் தண்ணீரை நோக்கி இறங்கியது. அனைத்து குப்பைகளும் கடலில் விழும் வகையில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டது. முடிந்தவரை குப்பைகளை மீட்க கப்பல்கள் அனுப்பப்பட்டன.
பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பலூனை கவனித்து வருவது குறித்து உறுதியளித்தார். சீனாவுடனான உறவுகள் மற்றும் பலூன் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு நிருபர்கள் கேட்டதற்கு, பைடன்,"நாங்கள் அதை கவனித்துக்கொள்கிறோம்" என்றார்.
பலூன், ஜனவரி 28 அன்று அமெரிக்க வான்வெளிக்குள் நுழைவது கண்டறியப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும்-பாலிஸ்டிக்-ஏவுகணைக் குழிகள் உள்ள மொன்டானாவில் அந்த பலூன், சனிக்கிழமையன்று (பிப். 4) வடக்கு கரோலினாவுக்குச் சென்றது.
பலூன் சீனாவுக்கு சொந்தமானது என்பதை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப். 3) உறுதிப்படுத்தியது. ஆனால் அது காலநிலை ஆராய்ச்சியை நடத்தும் ஒரு வான்வழி ஆய்வுக்கானது என்று கூறியது. அதுவும் வழித்தவறிவிட்டதாக தெரிவித்தது. தரையில் உள்ள மக்கள் அல்லது சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்க அதிகாரிகள் இத்தனை நாள்களாக அதை சுட்டு வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அப்பாடா டிவிட்டர் தொல்லை முடிஞ்சுபோச்சு! நிம்மதி பெருமூச்சு விடும் எலான் மஸ்க்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ