இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் 33 பேர் ராணுவ நீதிமன்றங்களில் விசாரணையை எதிர்கொள்ள ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார். வெள்ளிக்கிழமையன்று (2023, மே 26) இது குறித்து தகவல் தெரிவித்த அவர் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் முழுவதும் வன்முறைப் போராட்டங்களைத் தூண்டிய இம்ரான் கான் மே 9 அன்று கைது செய்யப்பட்டார். அதையடுத்தும், அதைத் தொடர்ந்தும், போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.



கைது செய்யப்பட்டவர்களில் 33 குற்றவாளிகள், பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்னர். இந்த குற்றவாளிகள் அனைவரும், முக்கியமான இராணுவ நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சனாவுல்லா கூறினார்.



ஊழல் குற்றச்சாட்டில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். தன் மீதான ஊழல் குற்றச்சட்டை இம்ரான் கான்  தொடர்ந்து மறுத்து வருகிறார்.


மேலும் படிக்க | Imran Khan: நாளை மீண்டும் இம்ரான் கான் கைது செய்யப்படலாம்! சூசக அறிவிப்பால் பதற்றம்


கைது செய்யப்பட்ட இம்ரான் கான், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் சக்திவாய்ந்த ராணுவ ஜெனரல்களுடனான இம்ரான் கானின் மோதல் அதிகரித்துள்ளது.


பாகிஸ்தான், தற்போது மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால், அரசியல் அமைதியின்மை மிகவும் மோசமடைந்துள்ளது. பணவீக்கம் வரலாறு காணாத அளவு உச்சத்தில் உள்ளது, பொருளாதார வளர்ச்சி சுத்தமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், கடன்களுக்கான வட்டியைக் கூட திருப்பித் தரமுடியாத பாகிஸ்தான் மீது, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு சுமைகளை மேலும் சுமத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது.


இதனிடையில் பாகிஸ்தானில் நிலவும் அரசியல் மோதல்களும் உச்சமடைந்துள்ளன. இது பொருளாதார சிக்கல்களை சீர் செய்வதில் மேலும் சுணக்கத்தை ஏற்படுத்தும்.


"இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அத்துமீறி நுழைந்து, மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழைந்தவர்கள்" என்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர் கூட்டத்தில் சனாவுல்லா கூறினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியமான உபகரணங்கள், கணினிகள் மற்றும் பிற தரவு சேகரிப்பு ஆதாரங்களை சேதப்படுத்தியதாகவோ அல்லது திருடியதாகவோ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு


எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளை மீறுவதில் ஈடுபடுபவர்கள் மட்டுமே இராணுவ சட்டங்களின் கீழ் விசாரணையை எதிர்கொள்வார்கள் என்று அவர் கூறினார், இராணுவ நீதிமன்றங்களில் பெரிய அளவிலான விசாரணைகள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.


ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், இம்ரான் கானையும் இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்று சுட்டிக் காட்டினார்: "எனது சொந்த மதிப்பீடு மற்றும் எங்களிடம் உள்ள ஆதாரங்களின்படி ... இந்த குழப்பம் மற்றும் திட்டமிடல் அனைத்தையும் உருவாக்கியவர் இம்ரான் கான், எனவே அவரும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்" என்று உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார். 


பொதுமக்கள் மீதான இராணுவ விசாரணைகள் குறித்து உரிமைக் குழுக்கள் கவலைகளை எழுப்பியுள்ளன. ராணுவ நீதிமன்றத்தில், நியாயமான விசாரணையை உறுதி செய்ய முடியாது என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால், ராணுவ நீதிமன்றங்களின் விசாரணை நடைபெறும் இடத்திற்கு, வெளியாட்கள் மற்றும் ஊடகங்கள் செல்ல அனுமதி கிடையாது.


இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்று பாகிஸ்தான் அமைச்சர் கூறினார்.


மேலும் படிக்க | அடேங்கப்பா...இந்தியாவிலேயே இந்த ஊரில் தான் சம்பளம் அதிகம் - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ