Imran Khan: நாளை மீண்டும் இம்ரான் கான் கைது செய்யப்படலாம்! சூசக அறிவிப்பால் பதற்றம்

Former PM Imran Khan Fears For Arrest: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் தன்னை அரசு, மீண்டும் கைது செய்யலாம் என்று ஆருடம் சொல்கிறார். இது வெறும் ஆருடம் மட்டும் தானா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2023, 08:31 PM IST
  • என்னை உள்ள தள்ளாம விட மாட்டாங்க!
  • பாகிஸ்தான் அரசை சாடும் இம்ரான் கான்
  • நாளை மீண்டும் கைது செய்யப்படுவாரா இம்ரான் கான்
Imran Khan: நாளை மீண்டும் இம்ரான் கான் கைது செய்யப்படலாம்! சூசக அறிவிப்பால் பதற்றம் title=

இஸ்லாமாபாத்: செவ்வாய்கிழமை மீண்டும் தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சும் இம்ரான் கான், அதற்கான '80% வாய்ப்புகள் உள்ளன' என்கிறார். அல் காதர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செவ்வாய்க்கிழமை தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் முன் ஆஜராவார். அப்போது அவர் மீண்டும் கைது செய்யப்படலாம். 

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf (PTI)) தலைவர் இம்ரான் கான், அல் காதர் அறக்கட்டளை வழக்கில் இந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்குச் செல்லும்போது மீண்டும் கைது செய்யப்படலாம் என்று அவர் கருதுகிறார்.  

ராணுவத்தின் அதிகாரம் அதிகமாக உள்ள பாகிஸ்தானில் என்ன வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.  5 முன்னாள் பிரதமர்கள் மீது நடவடிக்கையை எடுத்துள்ள பாகிஸ்தானில், ஆறாவது முன்னாள் பிரதமர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

மேலும் படிக்க | ஜப்பானில் இந்தியப் பிரதமரின் சந்திப்புகள்! எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன?

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று இரவு 9 மணிக்கு மக்களுடன் பேசுவார் என்று அவரது பிடிஐ கட்சி டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா தனது அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்,

மேலும் படிக்க | அழிவை நோக்கி செல்லும் பாகிஸ்தான்! இம்ரான் கானால் அதிகரிக்கும் சிக்கல்கள்!

"செவ்வாயன்று, நான் பல்வேறு ஜாமீன்களுக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகப் போகிறேன், மேலும் நான் கைது செய்யப்படுவதற்கு 80 சதவீத வாய்ப்புகள் உள்ளன" என்று முன்னாள் பிரதமர் அளித்த ஒரு பேட்டியின் போது கூறினார்.

அவரது கட்சியின் மீதான ஒடுக்குமுறையை குறிப்பிட்ட இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர்கள் பெண்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்குள் அல் காதர் அறக்கட்டளை வழக்கு விசாரணையில் இம்ரான் கான் இணையலாம் என்று தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) கூறுகிறது. ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பின் அழைப்பு அறிவிப்புக்கு அவர் அளித்த பதிலில், அவர் விசாரணையில் சேர மேற்கூறிய நேரத்தை உறுதிப்படுத்துமாறு NAB-ஐ அவர் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க! இந்தியப் பிரதமரின் காலில் விழுந்த பப்புவா கினியா பிரதமர்

ஜூன் 2-ம் தேதி வரை இம்ரான் கானுக்கு ஜாமீன் இருக்கிறது. அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் (IHC) ரேஞ்சர்ஸ் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டார். \கைதுக்குப் பிறகு, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர் மற்றும் மர்தான் உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இம்ரானின் பிடிஐ கட்சித் தொண்டர்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மே 9ஆம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்க லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் பிற பி.டி.ஐ தலைவர்கள், NAB விசாரணையை எதிர்கொள்கின்றனர், ஊ இம்ரான் கானுடன் தொடர்புடையவர்களின் ஊழலால், நாட்டின் தேசிய கருவூலத்திற்கு 190 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கைது "சட்டவிரோதமானது" என்று அரசைக் கண்டித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது இம்ரான் கான், உச்ச நீதிமன்ற அமர்வின் முன் ஆஜர்படுத்திய பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி! ஜப்பானில் இந்தியப் பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News