இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்
மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு சரிந்தது.
சீனாவின் கடன் வலைக்குள் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள இலங்கையின் பாதையில் பாகிஸ்தானும் செல்கிறது. லாகூர் ஆரஞ்ச் லைன் திட்டத்திற்கு வழங்கியுள்ள 55.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை, 2023 நவம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துமாறு சீனா சமீபத்தில் கோரியது பாகிஸ்தானிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதார நிலை ஏற்கனவே மிக மோசமாக உள்ளபாகிஸ்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.
இதற்கிடையில், மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.915 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு சரிந்தது.
இதனால், சீனாவுடனான உறவுகளைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் இருண்ட பொருளாதார எதிர்காலத்தை எதிர்கொள்கிறது. லாகூர் ஆரஞ்சு லைன் திட்டத்தை 2020ல் முடித்த சீன நிறுவனமான சீனா-ரயில்வே நார்த் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் (CR-NORINCO) மார்ச் 2023 இறுதிக்குள் 45.3 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை பஞ்சாப் மாஸ் டிரான்சிட் அத்தாரிட்டி திரும்ப செலுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. மேலும் அந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையுன் திரும்ப செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
CR-NORINCO ஒப்பந்தம் 16 நவம்பர் 2023 அன்று காலாவதியாகும் முன் அனைத்து நிலுவைத் தொகைகளையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. 2021-2022 நிதியாண்டில், 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் சீ வழங்கிய வர்த்தக நிதி உதவிக்காக பாகிஸ்தான் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீனாவுக்கு வட்டியாகச் செலுத்தியது. 2019-2020 நிதியாண்டில், 3 பில்லியன் டாலர் கடனுக்கான வட்டியாக 120 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானிடம் இருந்து பணத்தை மீட்பதில் சீனா கடுமையாக செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் 2022 முதல் வாரத்தில் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் கீழ் புதிய அரசியல் ஆட்சிக்கு வந்தபோதே கடன் தொகை திரும்ப செலுத்தப்பட வேண்டும் என சீனா கூறியது.
கடந்த ஆண்டு, தாசு அணை பயங்கரவாத தாக்குதலில் இறந்த 36 பொறியாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 38 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும் சீனா கோரியது. இழப்பீடு தந்தால் தான் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்நிபந்தனை விதிக்கப்பட்டது. சீனாவை சமாதானப்படுத்த, பாகிஸ்தான் 11.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டது.
பாகிஸ்தானின் கடன் பிரச்சனைக்கு சீனா பெரும் காரணமாக இருந்தாலும், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அடுத்தடுத்த அரசாங்கங்கள் தவறாகக் கையாள்வதே தற்போதைய பொருளாதார இக்கட்டிற்கான காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா, சவூதி அரேபியா மற்றும் கத்தாரில் இருந்து பெறப்பட்ட பெரும் கடன்கள் மற்றும் 30 ஆண்டுகளில் IMF என்னும் சர்வதேச நிதியத்திலிருந்து பெற்ற கடன்கள் ஆகியவை பொருளாதார வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும் என நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும், சர்வதேச செலாவணி நிதியம், கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால், 2019ஆம் ஆண்டு USD 6 பில்லியன் கடனை நிறுத்தி வைத்தது. முரண்பாடாக, பாகிஸ்தான் தன்னை கடன் அடிமையாக வெளிப்படுத்தவும், வெட்கப்படவில்லை.
மோசமான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதிக கடன் சுமைகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் அடுத்த நாடாக பாகிஸ்தான் இருக்கும் என்பதால், இலங்கையின் வழியில் பாகிஸ்தானும் கடும் நெருக்கடியை சந்திக்கும் நாள் வெலு தொலைவில் இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR