ரஷ்ய அதிபரான விலாடிமிர் புதினுக்கு சட்டப்பூர்வமாக லுட்மிலா அலெக்ஸான்ரோனா ஓசேரெட்னயா என்ற மனைவியும், மரியா புதினா, கேத்ரினா டிக்கோனோவா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். 2013ஆம் ஆண்டு முதல் மனைவியான லுட்மிலாவை புதின் விவாகரத்து செய்தது குறிப்பிடதக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், 69 வயதான ரஷ்ய அதிபர் புதினுக்கு 38 வயதில் ஒரு ரகசிய காதலியுள்ளார் என பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.


அந்த ரகசிய காதலியாக கருதப்படுபவரின் பெயர் அலினா கபேவா. உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த இவர் இஸ்லாமிய பெண்ணாக வளர்ந்துள்ளார். ஆனால் தற்போது கிறுஸ்துவத்தை பின்பற்றுகிறார் என கூறப்படுகிறது. 



முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆன அலினா கபேவா இதுவரை 2 ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்கள், 25 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மெடல்கள் என பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் 2006ல் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்டு புதினின் கட்சியில் எம்பி ஆக பணியாற்றி வந்தார்.


மேலும் படிக்க | கால்வன் மோதல்; சீனாவின் பொய்களை அம்பலப்படுத்தியது ஆஸ்திரேலிய நாளிதழ்



2008ல் முதல் முறையாக இவர்கள் இருவரின் காதல் கதை வெளியில் தெரிய வந்தது. பின்னர் ரஷ்ய ஊடகங்களுக்கு இதை பற்றி பேச தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2015ல் அலினா கபேவா தனது முதல் குழந்தையாக ஒரு மகளைப் பெற்றெடுத்தார். 



பின்னர் 2019ல் இரட்டை ஆண் குழந்தைகள் இவருக்கு பிறந்தது. இன்னும் ஒரு பெண் குழந்தை இவருக்கு பிறந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 4 குழந்தைகளுடன் அலினா கபேவா, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக அலினா தனது குழந்தைகளுடன் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெளிநாட்டிலுள்ள பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க |  Ladakh: கோக்ராவிலிருந்து பின் வாங்கின இந்திய, சீன படைகள்


இந்தநிலையில் புதினை எதிர்ப்பவர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசிடம் சமர்பித்துள்ளனர்.



அந்த மனுவில், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புதினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிடபட்டுள்ளது.


‘சேஞ்ச்.ஆர்க்’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 61,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்துவதன் மூலம் சொந்த நாடான ரஷ்யாவுக்கு அலினாவும் அவரது குழந்தைகளும் திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | கமல்ஹாசன் படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR