ஆண்களுக்கு மட்டும்தான் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? பெண்களுக்கும் கிடைக்கும்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண் நண்பருடன் உடலுறவு வைத்தபோது திருட்டுத்தனம் செய்த பெண்ணுக்கு பைல்ஃபெல்ட் நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம்,  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியது.


மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரிப்பதற்காக தனது ஆண் துணையின் ஆணுறையில் திருட்டுத்தனமாக துளையிட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.


ஜெர்மனியின் Bielefeld நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம் அந்தப் பெண் தனது 42 வயதான ஆண் நண்பருக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டைப் போட்டது "திருட்டுத்தனம்" என்றும், இது  பாலியல் வன்கொடுமை என்றும் குற்றம் சாட்டியது.


மேலும் படிக்க | காந்த ஆற்றலின் திடீர் வெளியீடுகளான சூரிய எரிப்பின் புகைப்படங்கள்


பாலியல் உறவில் திருட்டுத்தனம் என்பது உடலுறவின் போது ஆணுறையை நடுவழியில் அகற்றிவிட்டு அதை துணையிடம் இருந்து மறைப்பது.


பொதுவாக, இந்த குற்றத்திற்காக ஆண்கள் தண்டிக்கப்படுவார்கள், ஆனால் ஒரு பெண் தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால் இந்த வழக்கு பரபரப்பாக பேசப்படுகிறது.


இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்ததாகவும், பாலியல் உறவைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.


அந்தப் பெண் பின்னர் தனது துணையிடம் வலுவான உணர்வுகளை வளர்த்துக் கொண்டார், ஆனால் அந்த ஆண் சாதாரணமான உறவையே வைத்திருக்க விரும்பினார் என்று உள்ளூர் செய்தித்தாள் நியூ வெஸ்ட்ஃபலிஷே தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | பாலியல் வன்புணர்வு செய்த அப்பாவின் முகத்தை வீடியோ மூலம் தோலுரித்த மகள்


அடையாளம் தெரியாத பெண், கர்ப்பம் தரிக்க விரும்பினர். ஆனால், தனது நண்பருக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிந்ததும், திருட்டுத் தனமாக ஆணுறை பொட்டலத்தில் ரகசியமாக துளையிட்டார். ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.


கர்ப்பம் தரிக்காத போதிலும், ஆணுறைகளை நாசப்படுத்தியதாகவும், கர்ப்பமாக இருப்பதாக பொய் சொன்னதாகவும் அந்த பெண் தனது துணையிடம் ஒப்புக்கொண்டார்.


இதனால் கடுப்பும் எரிச்சலும் அடைந்த ஆண் நண்பர், பெண் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக கூறப்படுகிறது.


இதில் என்ன விந்தை என்றால், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பெண் ஒப்புக் கொண்டாலும், அவருக்கு எதிராக எந்த பிரிவில் என்ன குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்று வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் ஆரம்பத்தில் உறுதியாக தெரியாமல் குழம்பிப் போய்விட்டார்களாம்.  


மேலும் படிக்க | என்னை எப்படா கழுதைன்னு சொன்னேன், டங் ஸ்லிப்பாயிடுச்சோ: வைரலாகும் இம்ரான் கான்


"நாங்கள் இன்று இங்கே சட்ட வரலாற்றை எழுதியுள்ளோம்," என்று நீதிபதி அஸ்ட்ரிட் சலேவ்ஸ்கி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


முதலில் இந்த குற்றச்சாட்டை "திருட்டுத்தனம்" என்று பதிவு செய்யலாம் என்றும் அதன் பிறகு இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் பதிவது பொருத்தமானது என்று முடிவுக்கு வந்தனர் சட்ட வல்லுநர்கள்.


ஆணுறைகளை ஒருவருக்கு தெரியாமல் பயன்படுத்துவதும் தவறு. அதேபோல், ஒருவரின் சம்மதமின்றி பயன்படுத்துவதும் சரியில்லை, அதுவும் குற்றம் தான் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.


எது எப்படியிருந்தாலும், ஆணுறையில் துளையிட்ட பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவது என்பது உலகிலேயே முதன்முறையாக இருக்கும் என்று தெரிகிறது.


இந்த செய்தி தற்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வைரலாகிறது.


மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR