என்னை எப்படா கழுதைன்னு சொன்னேன், டங் ஸ்லிப்பாயிடுச்சோ: வைரலாகும் இம்ரான் கான்

பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நெட்டிசன்களின் ட்ரோல்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 7, 2022, 08:18 PM IST
  • எந்த நேரத்தில எதை உதாரணம சொல்றதுன்னு தெரியாம போச்சே
  • இப்படி வச்சு ஓட்டறாங்களே!
  • இம்ரான் கானின் புலம்பல்
என்னை எப்படா கழுதைன்னு சொன்னேன், டங் ஸ்லிப்பாயிடுச்சோ: வைரலாகும் இம்ரான் கான் title=

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இடம் பெற்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவருடன் கழுதை புகைப்படங்களும் இணைந்து வைரலாகிறது. 

பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நெட்டிசன்களில் ட்ரோல்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு சிரிக்க வைக்கும் பேசுபொருளாகியிருக்கிறார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உள்ளடக்க உருவாக்குநர்களான ஜுனைத் அக்ரம், முஸம்மில் ஹாசன் மற்றும் தல்ஹா ஆகியோருடன் சமீபத்தில் போட்காஸ்டில் இடம்பெற்றார்.

மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு 

முன்னாள் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் தங்கியிருப்பது பற்றி பேசும் போட்காஸ்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதில் இம்ரான் கான் தன்னை கழுதையுடன் ஒப்பிட்டு பேசியது வைரலாகி வருகிறது. இந்த போட்காஸ்ட் வீடியொவில் மிகவும் கிண்டலான முறையில் இம்ரான் கான் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்தில் இருக்கும் அவர், அங்கு தனது வாழ்க்கையைப் பற்றியும் பேசியிருக்கிறார். இங்கிலாந்து தனக்கு ஒருபோதும் சொந்தமாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை இங்கிலாந்தில் ஆசையுடன் வரவேற்கப்பட்டதாக கூறும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், ஆனால் அதை தனது வீடாக கருதமுடியவில்லை என்று கூறினார்.

நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். நான் என்ன செய்தாலும், எங்குக் இருந்தாலும் பாகிஸ்தானி தான். நான் என்ன செய்தாலும் ஆங்கிலேயன் ஆகிவிடுவேனா? கண்டிப்பாக இல்லை என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கழுதையின் கோடுகளை வரைந்துவிட்டால், அது வரிக்குதிரையாக மாறிவிடுமா என்ன? என்று இம்ரான் கான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இது இம்ரான் கான் தன்னை கழுதையுடன் ஒப்பிட்டார் என்ற தலைப்பில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகிறது (Viral Video) இந்த வீடியோ.

ஆனால், உண்மையில் இம்ரான் கான், தெரிந்தே தன்னைக் கழுதையுடன் ஒப்பிடவில்லை. அவர் தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது கொடுத்த உதாரணம் தான், அவரை கழுதையுடன் ஒப்பிட்டதுபோல ஆகிவிட்டது.

ஆனால், வேடிக்கையாக பேசினாலும், தான் என்றுமே பாகிஸ்தானி தான் என்பதை இந்த வைரல் வீடியோ மூலம் அனைவர் மனதிலும் தெளிவாக பதியவைத்துவிட்டார் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

வரிக்குதிரையும் கழுதையும் ஒப்பிட்டுத் தான் இம்ரான் கான் பேசினார் என்றாலும், அவர் சொன்ன ஒப்பீடு சமூக ஊடகங்களில் வைரலாவது வேறு மாதிரி திரிந்து விட்டது.

கழுதையை தன்னுடன் ஒப்பிட்டார் இம்ரான் கான் என்ற செய்தி, சிரிக்க வைத்தாலும் ஒரு விஷயத்தை பிறர் பார்க்கும் கோணம் மாறுபடுகிறது என்பதை புரிய வைக்கும் உதாரணமாக இருக்கிறது.

மேலும் படிக்க | அதிக பணி நேரம், 6 நாட்கள் வேலை: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷரீபின் அதிரடி முடிவுகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News