COVID-19 Vaccine : கொரோனா தடுப்பு உற்பத்தியில் ரஷ்யாவும் ஈரானும் கை கோர்கிறதா..!!!
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில், இணைந்து செயல்படுவது தொடர்பாக இராணும் ரஷ்யாவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில், இணைந்து செயல்படுவது தொடர்பாக இராணும் ரஷ்யாவும் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஈரான் (Iran) மற்றும் ரஷ்யாவின் இறையாண்மை நிதி ( RDIF) ஆகியவை COVID-19 க்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பில் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக மாஸ்கோவிற்கான ஈரானிய தூதரை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாஸ்கோ (mascow): "நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், RDIF தலைவரான கிரில் டிமிட்ரிவ் உடன் பேசினேன், எங்கள் அதிகாரிகள் பல சுற்று ஆலோசனைகளை நடத்தியுள்ளனர், நாங்கள் ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளோம்" என்று மாஸ்கோவுக்கான தூதர் காசெம் ஜலாலி (Kazem Jalali ) கூறியுள்ளார்.
இதுவரை, ரஷ்யா இந்தியாவுடன் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 300 மில்லியன் டோஸ் 'ஸ்பூட்னிக்-வி' (Sputnik-V’) தடுப்பூசியை உற்பத்தி செய்ய உள்ளது. பிரேசில் உட்பட பல நாடுகளுடன் இதுபோன்று, இணைந்து தயாரிப்பது குறித்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
முன்னதாக, இருவாரங்களுக்கு முன்னதாக இந்தியாவில் தடுப்பூசி ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி (Sputnik-V) கோவிட் -19 தடுப்பூசி (Covid-19 Vaccine) இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் (Dr Reddy Labs) தயாரிக்க ஒப்பந்தம். சுமார் 100 மில்லியன் (பத்து கோடி) அளவு தடுப்பூசிகளை தயாரிக்க திட்டம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியன்று, ரஷ்யா (Russia) கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கு ( Corona Vaccine) ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி (Sputnik V) என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. இரண்டு மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷ்யா இந்த தடுப்பூசியை பதிவு செய்தது என செய்தி வெளியானது.
மேலும் படிக்க | சீனாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்ட மதமா.. பெருகி வரும் தடுப்பு மையங்கள்..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR