Shooting In Nashville: டென்னசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியதாக போலீசார் கருதிய, சந்தேக நபர் இறந்துவிட்டார் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

The Covenant School இல் இந்த அதிர்ச்சிகரமான துப்பாக்கிச் சூடு நடந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவித்த Metropolitan Nashville காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் சந்தேக நபர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது, ஆனால் மரணத்திற்கு காரணம் போலீசாரின் நடவடிக்கையா, இல்லை சந்தேக நபரே தன்னைத் தானே சுட்டுக் கொண்டாரா என்ற தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


மேலும் படிக்க | NRI News: கலிபோர்னியா குருத்வாராவில் துப்பாக்கி சூடு! இருவர் படுகாயம்! 


அதேபோல, சந்தேக நபர் ஆணா அல்லது பெண்ணா என்பதையும் போலீசார் குறிப்பிடவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக செய்தி டிவிட்டரில் செய்தி வெளியிட்ட Nashville தீயணைப்புத் துறை,  "33 Burton Hills Blvd Covenant School இல் செயலில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நாங்கள் பதிலளிக்கிறோம். பலர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.



நாஷ்வில்லி போலிசார் ட்விட்டரில் "ஒரு தீவிரமான துப்பாக்கி சுடும் நிகழ்வு நடந்துள்ளது" என்றும் "சுடுபவர் MNPD (Metropolitan Nashville Police Department) ஆல் ஈடுபட்டு இறந்துவிட்டார்" என்றும் தெரிவித்துள்ளனர்.



2001 இல் நிறுவப்பட்ட இந்த பள்ளி, சுமார் 200 மாணவர்களைக் கொண்டது, நாஷ்வில்லில் உள்ள பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடம் இது.


வாண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் ஹவ்சர், "மூன்று குழந்தை நோயாளிகள் வாண்டர்பில்ட்டில் உள்ள மன்ரோ கேரல் ஜூனியர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அனைவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு பலியானார்கள். என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள்" என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | இந்திய வம்சாவளி சிறுமி கொலை வழக்கு! 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் கடுங்காவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ