கொழும்பு: இலங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக வழங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இதுவரை ஆஸ்திரேலியா மொத்தமாக 75 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா  $50 மில்லியன் நிதியுதவி அளித்தது. தற்போது ஆஸ்திரேலியாவில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 மில்லியன் டாலர்களை அவசர நிதியாக வழங்க தீர்மானித்துள்ளது. அடிப்படைத் தேவைகளுக்காக பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் இலங்கைப் பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்கள் சுலபமாக கிடக்கும் பொருட்டு இந்த உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“ஆஸ்திரேலியா இலங்கை மக்களுடன் குறிப்பாக கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களுடன் நிற்கிறது. இலங்கையின் பொருளாதார பின்னடைவை சரி செய்து அந்நாட்டை வலுப்படுத்துவதும் அதன் மீட்சியை துரிதப்படுத்துவதும் ஆஸ்திரேலியாவின் நோக்கம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.


மேலும் படிக்க | டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்க இருக்கும் முதிர்ச்சி கருவை கலைக்க இருக்காது


$25 மில்லியன் உதவித்தொகை என்பது, தீவு தேசத்திற்கான ஆஸ்திரேலியாவின் பங்களிப்பை $75 மில்லியனாக உயர்த்துகிறது. ஜூன் மாதத்தில், ஆஸ்திரேலியா $50 மில்லியன் அளவிலான நிதித்தொகுப்பை இலங்கைக்கு வழங்கியது. அப்போது, ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல், இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பண உதவியை அறிவித்திருந்தார்.


"இலங்கையில் உள்ள மூன்று மில்லியன் மக்களின் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய அவசர உணவு உதவிக்காக உலக உணவு திட்டத்திற்கு உடனடியாக 22 மில்லியன் டாலர்களை வழங்குவோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


"2022-23 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அவுஸ்திரேலியா 23 மில்லியன் டாலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்கும். இந்த பங்களிப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக அண்மையில் வழங்கப்பட்ட 5 மில்லியன் டாலர்களுக்கு மேலதிகமாக உள்ளன," என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா


22 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு நாடான இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இதர உயர்மட்ட அதிகாரிகள் பதவியை விட்டு வெளியேறிய பின்னர், முழு நாடும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டது.


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் மீண்டும் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை; எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.


நீண்ட நாட்களாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை இந்த வாரத்தில் முடிவடையும் என்று தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ