டீன் ஏஜ் சிறார்களுக்கு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சி இருக்கலாம், ஆனால் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான முதிர்ச்சியும் பக்குவமும் அவர்களுக்குக் கிடையாது என்று அமெரிக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 16 வயது வளர் இளம் பெண் ஒருவர், தான் பள்ளி மாணவியாக இருப்பதால், "குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை" என்றுகூறி, கருக்கலைப்பு சேய்யக் கோரி நீதிமன்றத்தை அணுகியதற்கு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, கருக்கலைப்பு செய்யக் கோரிய மாணவியின் கோரிக்கையை கீழ் நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.,
16 வயது மாணவி, தனது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க போதுமான முதிர்ச்சியடைந்தவர் என்பதை நிரூபிக்க தெளிவான மற்றும் உறுதியான சான்றுகள் கொடுக்கப்படவில்லை" என்று கீழ் நீதிமன்றம் கருதியது.
மேலும் படிக்க | 13 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்... கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்
பாதுகாப்பான கருக்கலைப்புக்கான பெண்களின் உரிமையை அமெரிக்கா பறித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஃபுளோரிடாவைச் சேர்ந்த டீன் ஏஜ் மாணவியின் கருக்கலைப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது மக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
கீழ் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை நிலைநிறுத்திய புளோரிடாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்வதற்கு மறுப்பு தெரிவித்தது. "குழந்தையை" கலைக்கும் அளவுக்கு "போதுமான முதிர்ச்சியடையவில்லை" என்று கருத்து தெரிவித்தது.
புளோரிடா மாநிலத்தில், கருக்கலைப்பு செய்ய விரும்பும் ஒரு மைனர் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களின்படி, சிறுமி "பெற்றோர் இல்லாதவர்". அந்த பெண், உறவினர் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலருடன் வசிக்கிறார்.
மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை மீதான நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் போராட்டம்
எனவே, கருக்கலைப்பு செய்ய விரும்பும் ஒரு மைனர் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் கீழ் நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒத்த கருத்தையே தெரிவித்துள்ளன.
பதின் பருவத்தை சேர்ந்த கர்ப்பிணியான பள்ளி மாணவியின் கருவுக்கு காரணமானவரும், இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவிக்க முடியவில்லை.
கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்து, அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களை கோபப்படுத்தியுள்ளது, அவர்களில் பலர் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.
மேலும் படிக்க | கருக்கலைப்பு தடை; அமெரிக்க தெருக்களில் வலுக்கும் மக்கள் போராட்டம்
தனது சொந்த கருக்கலைப்பு பற்றி வெளிப்படையாக விவாதித்த ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால், ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
This is the nation post-Roe: A Florida court has decided that a 16-year-old girl isn’t “sufficiently mature” enough to get an abortion, but IS mature enough to be a parent.
Codify abortion rights now. https://t.co/2P1X4pljl1
— Pramila Jayapal (@PramilaJayapal) August 17, 2022
"ரோவுக்குப் பிந்தைய நாடு இதுதான்: 16 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய "போதுமான முதிர்ச்சி" இல்லை என்று புளோரிடா நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை
ஜனநாயக ஃபுளோரிடா சட்டமன்ற உறுப்பினர் லோயிஸ் ஃபிராங்கல் இந்த தீர்ப்பை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விவரித்தார், மேலும் இது "பெண்களுக்கு எதிரான புளோரிடாவின் போருக்கு ஆபத்தான மற்றும் கொடூரமான உதாரணம்" என்றும் கூறினார்.
This is a dangerous & horrific example of Florida's war on women. If a young girl is too immature to choose an abortion, how is she fit to carry a pregnancy to term?
This is unacceptable. We must fight for the health, safety, & freedom of women.https://t.co/jkS7HcKkLE
— Rep. Lois Frankel (@RepLoisFrankel) August 17, 2022
புளோரிடாவின் பெண்கள் மீதான போருக்கு இது ஒரு ஆபத்தான & பயங்கரமான உதாரணம். ஒரு இளம் பெண் கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையாதவளாக இருந்தால், அவள் எப்படி கர்ப்பம் தரிக்கத் தகுதியானவள்? என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்காக நாம் போராட வேண்டும் என்று லோயிஸ் பிராங்கல் கேட்டுக் கொண்டுள்ளார்.
புளோரிடா மாகாணம்,15 வாரங்கள் வரையிலான கருக்கலைப்புக்கு அனுமதிக்கிறது மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி இந்த மனுக்களை தாக்கல் செய்த மாணவி ஏற்கனவே 10 வார கர்ப்பமாக உள்ளார்.
மேலும் படிக்க | Yuan Wang 5: சர்ச்சைக்குரிய சீனாவின் 'யுவான் வாங்' கப்பல் இலங்கை வந்தடைந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ