இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா
பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கு இடையே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல இடங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொழும்புவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | இலங்கை நெருக்கடி: ஒரு கிலோ மஞ்சள் ரூ.3,853; ஒரு கிலோ பிரெட் விலை ரூ.3,583
கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்னா ஜெயசுமனாவும் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் அளித்துள்ளார்.
முன்னதாக, மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க | பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR