இலங்கையில் தற்போது பொருளாதார நெறுக்கடியால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியா உட்பட உலக நாடுகள் இலங்கைக்கு உதவிக் கரங்களை நீட்டியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருப்பினும் கொடுத்த கடன் உதவிகள் தண்ணீர் போன்று செலவாகி மீண்டும் நிதி பற்றாக்குறையால் இலங்கை வாடுகிறது.


மீண்டும் மீண்டும் 1000 கணக்கான கோடிகளை நிதியுதவியாக அளிக்க எந்த நாடாகினும் சற்று தயங்கும்தான். அவ்வாறு இக்கட்டான சூழ்நிலையில் உதவவும் முடியாமல் அண்டை நாடுகள் தவிக்கின்றன.


சுற்றுலா துறையையே பிரதானமாக நம்பி இருந்த இலங்கையால் தற்போது கிடைக்கும் பண உதவியை பற்றாக்குறைகளை சமாளிக்க மட்டுமே பயன்படுத்த முடிகிறது. 


தொழிற்துறைகள் வலுவாக இருந்து நிதி நெருக்கடி ஏற்பட்டால் மூதலீடுகளை சரியான முறையில் பயன்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் கடன் நிதியை பயன்படுத்த முடியும், காலப்போக்கில் நிதி நிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு இருந்திருக்கும்.


அவ்வாறான சூழலில் இலங்கையின் தொழிற்துறை அம்சம் இல்லை. எனவே எவ்வளவு கடன் உதவி கிடைத்தாலும் பற்றவில்லை என்ற நிலை இலங்கையில் நீடிக்கிறது என நிதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இலங்கை தமிழர்களுக்கு உதவ அரிசு, பருப்பு போன்றவை அனுப்பத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு போன் செய்து தெரிவித்தார்.


இதையடுத்து தற்போது இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை மக்கள் அனைவருக்கும் உதவுமாறு முதல்வர் ஸ்டாலினிடம் சிலர் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.


இவ்வாறிருக்க, இலங்கை மத்திய வங்கியின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் நந்தலால் வீரசிங்கே. இவர் முதன்முறையாக கடந்த வெள்ளிக் கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசுகையில், இலங்கை மத்திய வங்கியை சுதந்திரமாக இயங்க அனுமதித்தால் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளித்து மீண்டு வர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?


பதவியேற்றபின் நந்தலால் வீரசிங்கே முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 


"இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சா கேட்டுக் கொண்டார்.


கொள்கை வட்டி விகிதத்தை 7 சதவீதம் அதிகரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இலங்கையில் இவ்வளவு அதிக விகிதத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.


நெருக்கடி நிலைமையை நிவர்த்தி செய்ய தேவையான மற்றும் போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம். சந்தை நம்பிக்கையில் சில நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன். 
திங்கட்கிழமை சந்தை திறந்தவுடன் சந்தைகளில் இருந்து நேர்மறையான விளைவுகளை எதிர்பார்க்கிறோம். நாங்கள் வெளிப்படையாகவும்,  உண்மையாகவும் இருப்போம். மேலும் வங்கிகளின் முழு ஆதரவும் எங்களுக்குத் தேவை."


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும், ஏப்ரல் 11ம் தேதியன்று சர்வதேச நாணய நிதியத்துடன் காணொலி வாயிலாக அவர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


வட்டி விகிதங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் இலங்கை இனி கவனம் செலுத்தும் என இதன் மூலம் தெரிய வருகிறது.


மேலும் படிக்க | Twindemic: ஒமிக்ரானுக்கு மத்தியில் ட்விண்டமிக் அச்சுறுத்தலும் வந்தால் என்ன செய்வது?


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR