சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதற்காக அவர் ஏற்படுத்தியுள்ள ஆலோகர்கள் குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணன் என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். முதலில், குறிப்பாக ட்விட்டரின் தலமை நிர்வாக அதிகாரியாக இருந்த வெளிநாடு வாழ் இந்தியரான பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும் ட்விட்டரின் தலைமைப் பொறுப்புக்கு புதிய அதிகாரிகளையும் அவர் நியமித்து வருகிறார். தற்போது, டிவிட்டரின் சரி பார்ப்பு சேவையான ப்ளூ டிக் சேவை பெற மாத கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் ஸ்ரீராம் கிருஷ்ணன் அக்டோபர் 31 அன்று தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட செய்தியில், ட்விட்டர் அலுவலகத்தின் படத்தை வெளியிட்டதோடு, எலான் மஸ்க்கிற்கு தற்காலிகமாக உதவுவதாகவும் குறிப்பிட்டார். வாடிக்கையாளா்களுக்குப் புதிய சேவைகளை வழங்கும் விவகாரம் தொடா்பான ட்விட்டா் குழுவின் ஆலோசகராகவும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஏற்கெனவே செயல்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி ஆகிய இருவரும் சென்னையில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் SRM கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன், 2003 ஆம் ஆண்டு கணிணி மென்பொருள் பொறியியல் படிக்கும் போது, கல்லூரியில் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி ஆகிய இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த தம்பதியினர் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ₹3.5 லட்சம் கோடி... $44 பில்லியன் டாலர்... பணத்தை எப்படி திரட்டினார் எலான் மஸ்க்!


ஸ்ரீராம் கிருஷ்ணன் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய நிலையில், பின்னர் யாஹூ, பேஸ்புக் மற்றும் ஸ்னாப் ஆகியவற்றில் உயர்மட்ட நிர்வாகப் பதவிகளை வகித்திருக்கிறார். சமூக ஆடியோ செயலியான கிளப்ஹவுஸில், 2021ஆம் ஆண்டில், முக்கிய முதலீட்டாளரான Andreesen Horowitz (a16z) உடன் இவர் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போது வரை இவர் இங்கு தான் முழுநேர பணியாளராக உள்ளார்.


மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?


மேலும் படிக்க | ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ