காபூல்: ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபானுக்கு பல பின்னடைவுகள் வரத் தொடங்கியுள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள வளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. முன்னதாக அமெரிக்கா ரூ .706 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது என்பது குறிப்பிடத்தகது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IMF அவசரகால இருப்புக்களை பிளாக் செய்துள்ளது


சர்வதேச நாணய நிதியம் அதாவது IMF எடுத்துள்ள முடிவுக்குப் பிறகு, தாலிபான்கள் ஆக்கிரமிப்பில் உள்ள ஆப்கானிஸ்தான் இனி ஐஎம்எஃப் வளங்களைப் பயன்படுத்த முடியாது, அதற்கு எந்த வித புதிய உதவிகளும் கிடைக்காது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) ஆப்கானிஸ்தானின் 46 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் ரூ .3416.43 கோடி அவசர இருப்புக்கான அணுகலைத் தடுப்பதாகவும் அறிவித்துள்ளது.


தாலிபான்களின் ஏழ்மை தொடரும்


சர்வதேச நாணய நிதியம் இந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின்  சுமார் 9.5 பில்லியன் டாலர் அதாவது சுமார் 706 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது. இதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் நாட்டு பணம் தாலிபான்களின் கைகளில் செல்லாமல் இருக்க, ஆப்கானிஸ்தானுக்கான நிதி வழங்கலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.


ALSO READ: ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை; ஷரியத் சட்டம் தான்: தாலிபான்


இத்தகைய சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அடாவடியாக ஆப்கானிஸ்தானுக்கு (Afghanistan) தாலிபான்கள் திரும்பி இருந்தாலும், அவர்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டி இருக்கும்.


தாலிபான் சரக்கு இயக்கத்தை நிறுத்தியது


இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் (FIEO) டாக்டர் அஜய் சஹாய், இறக்குமதி-ஏற்றுமதிக்கு தாலிபான் விதித்துள்ள தடையை உறுதி செய்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துடனான உரையாடலில், டாக்டர் சஹாய், தாலிபான்கள் இந்த நேரத்தில் அனைத்து வித சரக்கு இயக்கத்தையும் நிறுத்தியுள்ளதாக கூறினார்.


“எங்கள் பொருட்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் வழியாகவே வழங்கப்பட்டன. அது இப்போதைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.”  என்று அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் ஆப்கானிஸ்தானின் நிலைமையை கண்காணித்து வருகிறோம். நிலைமை சரியானவுடன் நாங்கள் விநியோகத்தைத் தொடங்குவோம். ஆனால் தற்போது, ​​தலிபான்கள் ஏற்றுமதி-இறக்குமதியை நிறுத்தியுள்ளனர்.” என்றார்.


உலர் பழங்களின் விலை அதிகரிக்கக்கூடும்


இந்தியா சர்க்கரை, தேநீர், காபி, மசாலா பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறது. உலர் பழங்கள், வெங்காயம் போன்றவை பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே, ஆப்கானிஸ்தான் நெருக்கடி காரணமாக, உலர் பழங்களின் விலை வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இந்தியா 85 சதவீத உலர் பழங்களை ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்கிறது.


முன்னதாக, தாலிபான் (Taliban) இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புவதாக அறிவித்தது. அதே போல் இந்தியா தனது அனைத்து வேலைகளையும் முதலீடுகளையும் இங்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடர முடியும் என்றும் தாலிபான் கூறியது. இருப்பினும், தாலிபான்களின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் எப்போதும் பெரிய வித்தியாசம் இருக்கும். எனவே இந்தியா தாலிபான் இடையிலான உறவுகளைப் பற்றி தற்போது எதையும் சொல்வது கடினமான ஒன்றாகவே இருக்கும்.


ALSO READ: ஆப்கானில் தாலிபான் தாண்டவம்: துப்பாக்கிச்சூடில் இருவர் பலி, இடையில் குளிர்காயும் பாகிஸ்தான்?


ALSO READ: Taliban Returns: 2020-ல் எழுதப்பட்ட அரசியல் - ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கு காரணம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR