காபூல்: காபூலைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் தங்கள் இருப்பை நிலைநாட்டத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த பணி அவர்களுக்கு அத்தனை எளிதாகவும் இருக்கவில்லை. பல ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முழு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், சிலரோ தாலிபான்களுக்கு தங்கள் எதிர்ப்பையும் காட்டி வருகிறார்கள்.
சமீபத்திய வளர்ச்சியில், ஆப்கான் கொடியை ஏந்திச்சென்றதற்காக தாலிபான்கள் (Taliban) இரண்டு பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது தவிர, இப்போது ஆப்கான் இராணுவம் மற்றும் அரசாங்கம் இரண்டும் முழுவதுமாக தாலிபான்களிடம் சரணடைந்துவிட்ட நிலையில், தாலிபான்களுக்கு எதிராக குரல் எழுப்பும் பொறுப்பை ஆப்கான் மக்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்
எமக்குக் கிடைத்த தகவல்களின் படி, ஆப்கானிஸ்தான் குடிமக்கள் ஜலாலாபாத் தெருக்களில் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். ஆனால் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அவ்வாறு செய்தது அவர்களுக்கு பிரச்சனையாகிப் போனது. தாலிபான் போராளிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆப்கானிஸ்தான் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.
ALSO READ: தாலிபான் தொடர்புடைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது ஃபேஸ்புக் நிறுவனம்
தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் அதிபர் அஷ்ரப் கானியை கைது செய்யுமாறு இன்டர்போல் போலீசில் முறையிட்டுள்ளதாக டோலோ நியூஸ் மேற்கோள் காட்டியுள்ளது. இது தவிர, ஹம்தல்லா மொஹிப் மற்றும் ஃபசல் மஹ்மூத் ஃபாஸ்லியையும் கைது செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, இந்த மூன்று தலைவர்களும் ஆப்கானிஸ்தான் மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது தூதரகம் இந்தத் தலைவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து தொகையை மீட்க விரும்புகிறது.
முல்லா ரசூலை பாகிஸ்தான் விடுதலை செய்தது
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) அரசியலமைப்பின் படி, ஆப்கான் அதிபர் இறந்தாலோ, அவர் தப்பி ஓடிச்சென்றாலோ, அந்த பதவியில் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டால், துணை அதிபருக்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் அளிக்கப்படும் என ஆப்கான் தூதுவர் கூறியுள்ளார். அந்த வகையில் அம்ருல்லா சாலேதான் தற்காலிக தலைவராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, பாகிஸ்தான் (Pakistan), தாலிபான்களின் தலைவர் முல்லா முகமது ரசூலை 5 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒரு பிரிவை நிறுவிய பிறகு பாகிஸ்தானுக்கு தப்பி வந்த முல்லா முகமது ரசூல், பின்னர் அமீரகத்துக்கு சென்றதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: Taliban Returns: 2020-ல் எழுதப்பட்ட அரசியல் - ஆப்கானிஸ்தானின் நிலைமைக்கு காரணம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR