உலக அரங்கில் விரிவாய் பேசப்பட்ட பிரதான செய்திகள் 2020, October 28
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
புதுடெல்லி: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, அர்மீனியா என பல்வேறு நாடுகள் தொடர்பான முக்கிய சர்வதேச செய்திகளின் தொகுப்பு...
அமெரிக்கத் தேர்தல் 2020: அமெரிக்க வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதில் வரலாறு படைத்தனர்; 70 மில்லியனுக்கும் அதிகமானோர் அதிபர் தேர்தலில் இதுவரை வாக்களித்துள்ளனர்.
2020 முதல் பாதியில் கிட்டத்தட்ட 3500 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.
முதல் தலைமுறை கொரோனா வைரஸ் தடுப்பூசி 'பூரணமானதாக இல்லாமல் இருக்கலாம்' என்று இங்கிலாந்து taskforce கூறுகிறது
யேமனில் உண்மையான COVID-19 இறப்பு எண்ணிக்கையை செயற்கைக்கோள் படங்கள் வெளிப்படுத்துகின்றன
லுகாஷென்கோ (Lukashenko) எதிர்ப்பு போராட்டங்களில் பெலாரஸ் குடிமக்கள் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பான 500 வழக்குகள் பதியப்பட்டுள்ளன
Macronக்கு வலுக்கும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், சீனாவின் அரசு நடத்தும் சி.சி.டி.வி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்தின் உருவப்படம் காட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'அந்த துரோகிகள்' ('Those scoundrels')மக்ரோன் எதிர்ப்பு அலைக்கு மத்தியில் சார்லி ஹெப்டோவுக்கு எதிரான 'அனைத்து சட்ட மற்றும் ராஜதந்திர' நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாக எர்டோகன் உறுதி.
சர்வதேச ஒப்பந்தங்களை அனுமதிக்கும் புதிய மசோதாவை அங்கீகரிக்கும் ரஷ்யா மீது, நாட்டின் வலதுசாரி குழுக்கள் கடும் கோபம் கொள்கின்றன.
அமெரிக்கத் தேர்தல் 2020: தபால் வாக்குகளின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் டொனால்ட் டிரம்ப்பிற்காக, இவான்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் தபால் வாக்குகளை கண்காணிக்கின்றனர்
Karabakh அகதிகளுக்கு தங்குமிடமாகிறது வைர தொழிற்சாலை.
Also Read | மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR