மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம் @carbon footprint

Google, தனது அனைத்துவிதமான பேக்கேஜிங்களில் இருந்து பிளாஸ்டிக்கை அகற்றுவதாக உறுதியளிக்கிறது. தனது அனைத்துவிதமான தயாரிப்புகளிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய Recyclable Materialகளை பயன்படுத்தப்போகிறது Google.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 09:03 PM IST
  • Nest Audioவின் வெளிப்புறத்தில் 70% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • Nest Thermostat-இன் டிரிம் தட்டு 75% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சி பொருட்களுக்கு மாறும் கூகுளின் புதிய அவதாரம் @carbon footprint title=

புதுடெல்லி: சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசின் அளவையும், அதில் தங்களது பங்களிப்பையும், அதன் தாக்கத்தையும் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உணரும் காலம் இது. அப்படி உணரும் நிறுவனங்கள், தங்களால் வெளியிடப்படும் carbon footprintகளை குறைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

2022 ஆம் ஆண்டில் தனது அனைத்து தயாரிப்புகளிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு, கூகுள் அறிவித்திருந்தது. தனது புதிய தயாரிப்புகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு  வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூறுகிறது. அதாவது இதன் பொருள் என்னவென்றால் அடுத்த ஆண்டு வைக்கப்பட்ட இலக்கை சற்று முன்னதாகவே Google எட்டிவிட்டது.  

புதிய தயாரிப்புகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் அல்ல என்பதையும் நிறுவனம் தெளிவுபடுத்தியிருக்கிறது. உதாரணமாக, Pixel 5 இல் பயன்படுத்தப்படும் அலுமினிய பின்புற அட்டை மட்டுமே 100% மறுசுழற்சி செய்யக்க்கூடியது. இதேபோல், Google Nest Audio மற்றும் Nest Thermostat ஆகியவற்றிலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

Nest Audioவின் வெளிப்புறத்தில் 70% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. the Nest Thermostat-இன் டிரிம் தட்டு 75% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.  

திட்டமிட்டதை விட முன்னதாகவே தனது இலக்கை அடைந்த Google இப்போது தனது இலக்கை மேலும் நீட்டித்துள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் தனது hardware தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளிலும் குறைந்தது 50% மறுசுழற்சி செய்யப்பட்டவையாக இருக்கவேண்டும் அல்லது மறுசுழற்சி செய்யப்படக்கூடியவையாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இவற்றைத் தவிர, 2025 க்குள் 100% பிளாஸ்டிக் இல்லாத பேக்கேஜிங் மற்றும் 100% மறுசுழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்தவும் கூகுள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Read Also | உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் WhatsApp groupஇல் சேர்க்காமல் இருக்க trick இதோ…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News