இந்திய மாணவி ஜான்வி கந்துலாவை தாக்கி கொன்ற அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது கிரிமினல் வழக்குகள் இல்லை என்று தீர்ப்பாகியுள்ளது. அமெரிக்க காவல்துறை அதிகாரி கெவின், மிக வேகமாக கார் ஓட்டிச் சென்றதில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஜான்வி கந்துலா கொல்லப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விபத்து மரணம் தொடர்பான வழக்கில், சியாட்டில் காவல்துறை அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படாது என்று நேற்று (2024 பிப்ரவரி 21, புதன்கிழமை) வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஓராண்டுக்கு முன்னர், (ஜனவரி 2023) சவுத் லேக் யூனியன் கிராஸ்வாக்கில் நடந்துக் கொண்டிருந்த ஜான்வியின் மீது காவல்துறையின் வாகனம் மோதியதில் இந்திய மாணவி உயிரிழந்தார்.  


இது ஒரு விபத்து என்பதும், விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்பதையும் தாண்டி, மாணவியின் இறப்பு தொடர்பாக காவல்துறையின் அலட்சிய போக்கும் கேலியும் சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தைப் பற்றி, பேசிக் கொண்டு கேலி கேலி செய்து சிரிக்கும் வீடியோ, ஒரு மரணத்தை எவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கின்றனர் என்ற கேள்விகளை எழுப்பியது.


வைரலான அந்த வீடியோவில், சியாட்டில் போலீஸ் அதிகாரிகளின் கில்ட் துணைத் தலைவர் டேனியல் ஆடரர், கில்டின் தலைவருன் பேசிக் கொண்டு இருக்கும்போது, "அவள் இறந்துவிட்டாள்" என்று சொல்கிறார். மாணவி ஜான்வியை "வழக்கமான நபர்" என்று சொல்லிவிட்டு, "பதினோராயிரம் டாலர்களுக்கு ஒரு காசோலையை எழுதுங்கள்" என்றார்.


"அவளுக்கு எப்படியும் 26 வயது இருக்கும். எனவே அவர்களுக்கு இதுபோதும்" என்று பேசும் வீடியோவில் உள்ள கேலியை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்தனர்.  


மேலும் படிக்க | வேலையை விடாதீங்க... சம்பள உயர்வு 300%... இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!


வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அதிகாரியின் மீது, கிரிமினல் வழக்கு இல்லை என்று ஓராண்டிற்கு பிறகு தற்போது கூறப்பட்டுள்ளது.  இந்திய மாணவியை தாக்கி கொன்ற அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது கிரிமினல் வழக்குகள் இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 


காரணம் என்ன?
இந்த வழக்கை ஒரு கிரிமினல் வழக்காக நிரூபிக்க வாஷிங்டன் மாநில சட்டத்தின் கீழ் போதுமான ஆதாரங்கள் இல்லை என தீர்மானித்ததாக வழக்கறிஞர் லீசா மேனியன் தெரிவித்தார்.


சியாட்டில் காவல் துறைக்கு வழங்கப்பட்ட மெமோவின் படி, போலீஸ் எஸ்யூவியில் 40 கிமீ வேக வரம்பைக் கொண்ட தெருவில், 119 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்ற அதிகாரி கெவின் டேவ் சென்ற வாகனம் மோதி ஜான்வி உயிரிழந்துள்ளார். அவரது காரின் அவசர விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்ததாக கிங் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டது.


மற்ற பாதசாரிகள் இந்த சைரனைக் கேட்டதாகவும், ஆனால் அவரது வாகனம் நெருங்கி வருவதைக் கண்டு கந்துலா குறுக்கே ஓட முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஐநாவின் தடைகளை தொடர்ந்து மீறும் ரஷ்யா! ஆடம்பரமான காரை வடகொரியாவுக்கு பரிசளித்த ரஷ்யா!


சாலையில் நடந்து சென்றிருந்தபோது, ஜான்வி கந்துலா, வயர்லெஸ் இயர்பட்களை அணிந்திருந்ததால் அவருக்கு சைரன் ஓசை கேட்காமல் இருந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது..


அதுமட்டுமன்றி, அமெரிக்க அதிகாரி டேவ், வேண்டுமென்றே பாதுகாப்பை புறக்கணித்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


ஜான்வி கண்டுலா 
23 வயதான ஜான்வி கந்துலா என்ற மாணவி ஆந்திராவை சேர்ந்தவர். அமெரிக்காவின் சவுத் லேக் யூனியனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருந்தார். மாணவர் பரிமாற்ற திட்டத்தில் 2021 இல் அமெரிக்கா சென்ற அவர், கடந்த ஆண்டு டிசம்பரில் முதுகலைப் பட்டப்பை முடித்திருக்க வேண்டும்.  


மேலும் படிக்க | மனித மூளையில் சிப்... எண்ணங்களால் கணிணி மவுஸை இயக்கும் பக்கவாத நோயாளி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ