ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா வருமா? இங்கெல்லாம் வந்துடுச்சு!!
இந்த வார தொடக்கத்தில் ஹாங்காங் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்த அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மீண்டும் பாதிக்கப்பட்டுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ரெனோ: இந்த வார தொடக்கத்தில் ஹாங்காங் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்த அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து குணமடைந்த பின்னரும் மீண்டும் பாதிக்கப்பட்டுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது போன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் ஒருவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நெவாடா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். லேசான COVID-19 அறிகுறிகளைக் கொண்ட 25 வயதான ரெனோ நபருக்கு ஏற்கனவே ஏப்ரல் மாததத்தில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் குணமடைந்து இரண்டு முறை எதிர்மறையாக சோதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் மாதத்தில் மீண்டும் அவர் கோவிட்டுக்கு நேர்மறையாக சோதிக்கப்பட்டார். அவர் இரண்டாவது முறை வைரசால் தாக்கப்பட்ட போது, அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. அவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்பட்டது.
ALSO READ: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்துள்ளது
இரண்டு முறை அவர் பாதிக்கப்பட்டபோது செய்யப்பட்ட மரபணு சோதனைகளும், வைரஸ்கள் முக்கிய வழிகளில் ஒத்திருப்பதைக் காட்டின. ஆனால் குறைந்தது 12 இடங்களில் வேறுபட்டன. தொடர்ந்து தொற்று நீடிப்பது மட்டுமல்லாமல், முழுவதுமாக போன பிறகு மீண்டும் மனித உடலில் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன, ஆனால் இவை இருக்கின்றன, என்று நெவாடா மாநில பொது சுகாதார ஆய்வகத்தின் இயக்குனர் மார்க் பண்டோரி கூறினார். அந்த நபருடன் இருக்கும் அவரது தாயாருக்கோ தந்தைக்கோ கூட ஜூன் மாதத்தில் தொற்று ஏற்பட்டது. ஆகையால் ஜூன் மாதத்தில் அந்த நபருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த கண்டுபிடிப்புகள் இன்னும் பிற விஞ்ஞானிகளால் வெளியிடப்படவில்லை, மதிப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால் அவை ஒரு ஆராய்ச்சி தளத்தில் வெளியிடப்பட்டன.
இதன் மூலம் ஒருவரை ஒரு முறை கொரோனா வைரஸ் (Corona Virus) தாக்கினால், அவரை மீண்டும் அது தாக்காது என்று இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் அதே வைரசால் பாதிக்கப்படக்கூடும், தீவிரமாக தாக்கப்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பண்டோரி கூறினார்.
ALSO READ: அந்தமான் தீவு பழங்குடியினரையும் விட்டு வைக்காத கொரோனா என்னும் அரக்கன்..!!!